மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, புதன், 3 ஜுன் 2020

பாக்ஸர் போஸ்டர்: திடீர் வெளியீட்டிற்கு காரணம் என்ன?

பாக்ஸர் போஸ்டர்: திடீர் வெளியீட்டிற்கு காரணம் என்ன?

எதிர்பார்ப்பை உருவாக்கி வெளியிடத் திட்டமிட்டிருந்த அருண் விஜய்யின் ‘பாக்ஸர் ஃபர்ஸ்ட் லுக்’ நேற்றிரவு அவசர கதியில் வெளியிடப்பட்டது.

தடம் வெற்றிக்குப் பின் அருண் விஜய் நடிக்கும் படங்களின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது. ரசிகர்களை ஈர்க்கும் புதுமையான திரைக்கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்கத் தொடங்கியிருக்கிறார் அருண் விஜய். அதற்கு உதாரணமாக உருவாகி வரும் கார்த்திக் நரேன் இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் மாஃபியா போஸ்டர் சில நாட்களுக்கு முன் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், நேற்றிரவு எந்த முன்னறிவிப்புமின்றி அருண் விஜய்யின் அடுத்த படமான ‘பாக்ஸர்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியது. யாரும் எதிர்பார்க்கா வகையில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்ட போஸ்டர் ஒரே சமயத்தில் ரசிகர்கள் மத்தியில் ஆச்சர்யத்தையும், உடனடியாக வெளியான போஸ்டர் பின்னணியில் உள்ள காரணம் என்ன என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

இதற்கு விளக்கமளிக்கும் வகையில் அருண் விஜய் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் பாக்ஸர் ஃபர்ஸ்ட் லுக் பார்த்து தனக்கு அதிர்ச்சியாக இருந்ததாக குறிப்பிட்டுள்ளார். நேற்று மாலை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இணையத்தில் லீக்காகியுள்ளது. சில மணி நேரங்களிலேயே அது வைரலானதால் உடனடியாக அதிகாரபூர்வமாக நாங்களே வெளியிட நேர்ந்துள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார்.’

“9 மாத கடின உழைப்பு..இதோ உங்கள் பார்வைக்கு” என படத்தின் போஸ்டரை அருண் விஜய் பகிர்ந்துள்ளார். படத்தில் அருண் விஜய்யின் தோற்றமே முற்றிலும் மாறியது போல நிஜ பாக்ஸரை கண் முன் நிறுத்துகிறார். காயங்களுடன் ரித்விகா சிங்குடன் அருண் விஜய் இருக்கும் ஒரு போஸ்டரும், வெற்றி பெற்ற வீரன் மகிழ்ச்சியில் கத்துவது போன்ற மற்றொரு போஸ்டரும் ரசிகர்களை கவர்ந்துள்ளது.

விவேக் இயக்கியிருக்கும் இப்படத்தை எட்செட்ரா எண்டர்டெயின்மெண்ட் தயாரித்துள்ளது.

மேலும் படிக்க

உலகக் கோப்பை: அரையிறுதியில் என்ன நடக்கும்?

டிஜிட்டல் திண்ணை: உதயநிதி நியமனம் - குடும்பத்தில் நடந்த சென்டிமென்ட் போராட்டம்!

இங்கே வந்தால்... அங்கே இருந்தால்...: பட்டியல் போட்ட எடப்பாடி

செந்தில்பாலாஜி காலில் ஸ்கேட்டிங் சக்கரங்கள்: சபையில் விவாதம்!

தொடங்கிய இடத்திற்கே சென்ற வடிவேலு


வெள்ளி, 5 ஜூலை 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon