மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 5 ஜூலை 2019

உலகக் கோப்பை: அரையிறுதியில் என்ன நடக்கும்?

உலகக் கோப்பை: அரையிறுதியில் என்ன நடக்கும்?

பிரபு சங்கர்

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்னும் மூன்று லீக் போட்டிகள் மட்டுமே உள்ள நிலையில், தொடரின் இறுதிக்கட்டத்தில் உள்ளோம்.

வங்கதேசத்தை வென்றதன் மூலம், இந்தியா அரையிறுதியில் தனது இடத்தை உறுதிப்படுத்தியுள்ளது. மேலும் இங்கிலாந்து மூன்றாம் இடத்தை தக்கவைத்துள்ளது. பாகிஸ்தான் துரதிர்ஷ்டவசமான நிலையில் ஆடவுள்ளது. அவர்கள் தங்கள் கடைசி போட்டியில் பங்களாதேஷை அதிக ரன்கள் வித்தியாசத்தில் (300க்கும் மேல்) வென்றால் மட்டுமே அரையிறுதி வாய்ப்பு உள்ளது. அதனால் அரையிறுதிக்குச் செல்லும் அணிகள் கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டன.

இப்போது முதல் நான்கு இடங்களைப் பார்ப்போம். அரையிறுதியில் யார் யாரை எதிர்கொள்ளும் வாய்ப்புள்ளது? மூன்றாவது மற்றும் நான்காவது இடங்களில் முறையே இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் உள்ளன. ஆனால், ஆஸ்திரேலியாவுக்கும் இந்தியாவுக்கும் இன்னும் ஒரு போட்டி மீதம் உள்ளது. எனவே இந்தியா, இலங்கையை வீழ்த்தி, ஆஸ்திரேலியா தென்னாப்பிரிக்காவுடன் தோற்றால், இந்தியா முதலிடத்திலும், ஆஸ்திரேலியா இரண்டாவது இடத்திலும் இருக்கும். இரண்டு அணிகளும் தோற்றுவிட்டால் அந்தந்த இடங்களில் நீடிக்கும். முதல் நான்கு இடங்களில் எந்த மாற்றமும் இருக்காது. இந்தியா இங்கிலாந்தையும், நியூசிலாந்து ஆஸ்திரேலியாவையும் அரையிறுதியில் எதிர்கொள்ளும்.

நான்கு அணிகளில் ஆஸ்திரேலியாதான் மிகவும் பலம்வாய்ந்த அணியா இருக்காங்க. இந்தியாகூட மட்டும்தான் தோற்றாங்க, மத்த எல்லா அணிகளையும் ரொம்ப சுலபமா ஜெயிச்சுட்டாங்க. இங்கிலாந்து அணி இடையில சில தோல்விகள். ஆனால், இப்போ அதுல இருந்து மீண்டு வந்திருக்காங்க. போட்டி இங்கிலாந்துல நடக்குறதால அவங்களுக்கு சாதகமா அமைய வாய்ப்பிருக்கு.

இந்திய அணி உலக கோப்பைத் தொடரின் ஆரம்பத்திலிருந்தே நல்லா விளையாடிட்டு இருக்காங்க. நியூசிலாந்து அணிதான் கொஞ்சம் வீக்கான அணியா தெரியுறாங்க. காரணம், கடைசி சில போட்டிகளில் அவர்கள் விளையாடிய விதம் தான்.

இந்தியாவைப் பொறுத்தவரை, பேட்டிங்கில் ரோஹித் மற்றும் கோஹ்லி மற்றும் பௌலிங்கில் பும்ரா மற்றும் ஷமி போன்ற நிலையாக ஆடக்கூடிய வீரர்கள் உள்ளனர். நாம் உலகக்கோப்பையை வெல்ல வேண்டுமானால் அவர்களின் ஆட்டம் மிக முக்கியமான பங்கு வகிக்கும். ரோஹித் ஷர்மா இந்த தொடர்ல அதிக ரன்களைக் குவித்துள்ளார்.

அதே நேரத்தில் மிட்செல் ஸ்டார்க் அதிக விக்கெட்டுகளில் முன்னணியில் இருக்கார். ஆரோன் பிஞ்ச் மற்றும் வார்னர் ஆஸ்திரேலியாவுக்கு தொடர்ந்து எல்லாப் போட்டியிலும் ரன் குவிச்சிட்டு இருக்காங்க.

ரூட், பெர்ஸ்டோவ் மற்றும் ஸ்டோக்ஸ் இங்கிலாந்து வெற்றிக்கு முக்கிய காரணமா இருப்பாங்க.

நியூசிலாந்து அணியோட வெற்றி கேப்டன் கேன் வில்லியம்சன் மற்றும் ட்ரெண்ட் போல்ட் செயல்படுவதைப் பொறுத்தது.

இலங்கைக்கு எதிராக இந்தியா தனது கடைசி ஆட்டத்தை விளையாடும். பேட்டிங் மற்றும் பந்துவீச்சு நன்றாக இருந்தபோதிலும், மிடில் ஆர்டர் பிரச்சினை இன்னும் தீர்க்கப்படவில்லை. எனவே ஜடேஜா மற்றும் தினேஷ் கார்த்திக்கிற்கு வாய்ப்பு கொடுக்க இந்த ஆட்டத்தைப் பயன்படுத்தலாம்.

கடைசிப் போட்டி முடிவின் அடிப்படையில், இந்தியா அரையிறுதியை மான்செஸ்டர் அல்லது பர்மிங்காம் மைதானங்களில் விளையாடக்கூடும். இந்தியா ஏற்கனவே இரண்டு மைதானங்களிலும் தலா இரண்டு ஆட்டங்களில் விளையாடியுள்ளது.

மான்செஸ்டர் மைதானம் பேட்டிங்கிற்கு சாதகமான பிட்சாக இருக்கும். எனவே, முதலில் பேட்டிங் செய்யக்கூடிய அணி வெற்றி பெற வாய்ப்பு அதிகமா இருக்கும்.

இந்தியா ஐந்து பந்துவீச்சாளர்களுடன் ரிஷப் பந்த் மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகியோருடன் விளையாட முடியும். பர்மிங்காமில் இரண்டு பிட்சுகள் உள்ளன, சென்டர் பிட்ச் மற்றும் சைட் பிட்ச்

இங்கிலாந்து மற்றும் பங்களாதேஷுக்கு எதிரான இந்தியாவின் போட்டிகளுக்கு சைட் பிட்ச் பயன்படுத்தப்பட்டது. எனவே ஒரு புறத்தில் குறுகிய பவுண்டரி கருத்தில்கொண்டு, மூன்று வேகப்பந்து வீச்சாளர்கள் உட்பட ஐந்து பந்து வீச்சாளர்களுடன் இந்தியா விளையாட வேண்டும்.

இரண்டு போட்டிகளிலும் டாஸ் ஒரு முக்கிய காரணியாக இருக்கும். முதலில் பேட் செய்யும் அணிக்கு வெற்றி பெற அதிக வாய்ப்பு உள்ளது. இந்தியாவுக்கு இன்னும் மூன்று ஆட்டங்கள் மட்டுமே எஞ்சியுள்ள நிலையில், இந்த உலகக் கோப்பையில் கேப்டன் கோலி இன்னும் ஒரு சதம் கூட அடிக்கவில்லை. அவர் தொடர்ச்சியாக ஐந்து அரைசதங்களை அடித்துள்ளதால் அவரிடமிருந்து பெரிய இன்னிங்ஸை எதிர்பார்க்கலாம்.

தோனி கீழ் வரிசையில் தேவையான நேரத்தில் நிதானமாக ஆடி வருகிறார். அவர் அதைத் தொடர்ந்து செய்ய வேண்டும். எல்லாம் சரியாக அமைந்தால், இந்தியா மூன்றாவது உலகக் கோப்பையையும், கோலியின் தலைமையின் கீழ் முதல் உலகக் கோப்பையையும் வெல்லும் வாய்ப்பு நிச்சயம் உள்ளது.

மேலும் படிக்க

திட்டமிட்டே திமுகவில் இணைந்தேன்: தங்க தமிழ்ச்செல்வன்

டிஜிட்டல் திண்ணை: உதயநிதி நியமனம் - குடும்பத்தில் நடந்த சென்டிமென்ட் போராட்டம்!

இங்கே வந்தால்... அங்கே இருந்தால்...: பட்டியல் போட்ட எடப்பாடி

செந்தில்பாலாஜி காலில் ஸ்கேட்டிங் சக்கரங்கள்: சபையில் விவாதம்!

தொடங்கிய இடத்திற்கே சென்ற வடிவேலு


ஒமிக்ரான் பாதிப்பு அறிகுறிகள் என்ன?

8 நிமிட வாசிப்பு

ஒமிக்ரான் பாதிப்பு அறிகுறிகள் என்ன?

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் மாற்றம்!

2 நிமிட வாசிப்பு

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் மாற்றம்!

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: 21 காளைகளை அடக்கிய இளைஞர்!

3 நிமிட வாசிப்பு

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: 21 காளைகளை அடக்கிய இளைஞர்!

வெள்ளி 5 ஜூலை 2019