மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, ஞாயிறு, 31 மே 2020

தொடங்கிய இடத்திற்கே சென்ற வடிவேலு

தொடங்கிய இடத்திற்கே சென்ற வடிவேலு

வடிவேலு எப்போது திரையில் தோன்றி காமெடி காட்சிகளில் நடிப்பார் என அவரது ரசிகர்கள் எதிர்பார்த்துக்கொண்டிருக்க அவர் ஒரு நாடக மேடையில் ஏறி மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.

திரைத்துறையில் அறிமுகமாகி கோடிக்கணக்கான ரசிகர்களை சம்பாதித்துள்ள வடிவேலு தனது நடிப்பு பயணத்தை தொடங்கியது நாடக மேடையில்தான். கிராமங்களில் நடைபெறும் கோவில் திருவிழாக்களில் அரங்கேற்றப்படும் நாடகங்களில் மக்களை மகிழ்வித்துவந்தார்.

தற்போது அவர் சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகேயுள்ள கலியாந்தூர் கிராமத்தில் உள்ள அய்யனார் கோவில் புரவி எடுப்பு விழாவில் குடும்பத்தினருடன் கலந்துகொண்டார்.

இந்த விழா நடத்தப்படுவதன் மூலம் மழை பெய்யும் என்பது அப்பகுதி மக்களின் நம்பிக்கை. விழாவின் ஒரு பகுதியாக நடைபெற்ற வள்ளி திருமணம் நாடகத்தை வடிவேலு தொடங்கிவைத்தார். அந்த மேடையில் மக்களின் வேண்டுகோளுக்கிணங்க வடிவேலு ‘எட்டணா இருந்தால்’ பாடலை பாடினார்.

தொடர்ந்து பேசிய அவர், ”அய்யனாருக்கு அடிக்கடி திருவிழா நடத்தி மழையை வரவழைக்க வேண்டும், குடிநீர் பிரச்னை எல்லா இடங்களிலும் உள்ளது. அதனை வீணாக்காமல் சேமிக்க இளைஞர்கள் முன் வரவேண்டும் கிராமத்தின் பாரம்பரியமும், பண்பாடும் திருவிழாக்களில் உள்ளது. அதில் கலந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்” என்று கூறினார்.

மேலும் படிக்க

இங்கே வந்தால்... அங்கே இருந்தால்...: பட்டியல் போட்ட எடப்பாடி

திட்டமிட்டே திமுகவில் இணைந்தேன்: தங்க தமிழ்ச்செல்வன்

டிஜிட்டல் திண்ணை: ஆட்சிக் கவிழ்ப்பு - திமுக எம்.எல்.ஏ.க்கள் அப்செட்!

அமமுக அலுவலகம் மாறுகிறதா?

10%: தலைவர்களுடன் அமைச்சர் ரகசிய சந்திப்பு!


வியாழன், 4 ஜூலை 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon