மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 4 ஜுன் 2020

செந்தில்பாலாஜி காலில் ஸ்கேட்டிங் சக்கரங்கள்: சபையில் விவாதம்!

செந்தில்பாலாஜி காலில் ஸ்கேட்டிங் சக்கரங்கள்:  சபையில் விவாதம்!

சட்டமன்றத்தில் இன்று செந்தில்பாலாஜி கட்சி மாறியது பற்றி சூடான சுவாரஸ்யமான விவாதம் நடைபெற்றது.

இன்று (ஜூலை 4 ) சட்டமன்றத்தில் எரிசக்தி, மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இதில் பேசிய திமுகவின் அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்பாலாஜி பேசுகையில்தான் சர்ச்சைக்கான விதையை விதைத்தார்.

அவர் தன் பேச்சில், ‘நான் யாரிடமும் கும்பிட்டோ, குழந்தை போல தவழ்ந்தோ பதவி பெறவில்லை. எங்கள் தலைவர் ஸ்டாலின் தான் தமிழகத்தின் எதிர்காலம்” என்று ஆரம்பிக்க, ஆளும் அதிமுக தரப்பில் இருந்து கடுமையான எதிரொலிகள் வந்தன.

அப்போது முதல்வர் எழுந்து, “செந்தில்பாலாஜி கடந்த 3 ஆண்டுகளில் எத்தனை கட்சி மாறியிருக்கிறார் என்று எல்லாருக்கும் தெரியும். குனிந்து கும்பிடு போடுவதை பற்றியெல்லாம் அவர் பேசக் கூடாது” என்று சொல்லிவிட்டு, ஸ்டாலின் பற்றி முன்பு செந்தில்பாலாஜி பேசியதை குறிப்பிட்டுக் காட்டினார். உடனே செந்தில்பாலாஜிக்கு ஆதரவாக எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் எழுந்தார்.

“கட்சி மாறுவதையும் அணி மாறுவதையும் பற்றி பேசும் நீங்கள், உங்கள் பக்கத்தில் இருக்கும் துணை முதல்வர் தர்ம யுத்த காலத்தில் பேசியதை எல்லாம் பேசுவீர்களா?” என்று கேட்டார்.

உடனே துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் எழுந்து, “நான் பதவிக்காக கட்சி மாறவில்லை. என் கட்சிக்குள் தர்மயுத்தம் செய்தேன். செந்தில்பாலாஜியின் கால்களில் ஸ்கேட்டிங் சக்கரங்கள் கட்டியிருக்கிறார். அவர் ஓடிக் கொண்டே இருப்பார். அவரது காலில் உள்ள ஸ்கேட்டிங் சக்கரத்தை முதல் கழற்றி வைக்கச் சொல்லுங்கள்” என்றார்.

மீண்டும் ஸ்டாலின், “முதல்வர் செய்தித் தாள்களை வாசிக்கிறார். நானும் நாளை நமது எம்ஜிஆர் பத்திரிகைகளை எடுத்து வருகிறேன். படிக்க அனுமதி தாருங்கள்” என்றார்.

அப்போது முதல்வர், “செந்தில்பாலாஜி இப்போது போன இடத்திலாவது விசுவாசமாக இருக்கட்டும்” என்றார்.

இப்படியாக விவாதம் தொடர்ந்தது.

மேலும் படிக்க

இங்கே வந்தால்... அங்கே இருந்தால்...: பட்டியல் போட்ட எடப்பாடி

திட்டமிட்டே திமுகவில் இணைந்தேன்: தங்க தமிழ்ச்செல்வன்

டிஜிட்டல் திண்ணை: ஆட்சிக் கவிழ்ப்பு - திமுக எம்.எல்.ஏ.க்கள் அப்செட்!

அமமுக அலுவலகம் மாறுகிறதா?

10%: தலைவர்களுடன் அமைச்சர் ரகசிய சந்திப்பு!


வியாழன், 4 ஜூலை 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon