மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 3 ஜூலை 2019

புதுக்கோட்டை: விஜயபாஸ்கர் வலையில் ரத்தினசபாபதி

புதுக்கோட்டை: விஜயபாஸ்கர் வலையில் ரத்தினசபாபதி

டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.வாக இருந்த ரத்தினசபாபதி எம்.எல்.ஏ. நேற்று (ஜூலை 2) புதுக்கோட்டை மாவட்ட அமைச்சர் விஜயபாஸ்கருடன் சேர்ந்து தலைமைச் செயலகத்துக்கு சென்று, முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்திருக்கிறார். இதன் மூலம் தினகரன் அணியில் இருந்தவர் இப்போது மீண்டும் அதிமுகவுக்கே வந்துவிட்டார்.

சந்திப்புக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய ரத்தினசபாபதி,

“நான் இடையில் வேறு அணியில் இருந்தவன் என்பது அனைவருக்கும் தெரியும். அவர்கள் தனிக்கட்சி ஆரம்பித்தவுடன் நான் அதனை விட்டு விலகிவிட்டேன். மீண்டும் அதிமுகவில் இணைத்துக்கொள்ள வேண்டுமென்ற விருப்பத்தோடு இருந்தேன். தடுமாறி இருந்த என்னை மீண்டும் அதிமுகவுக்கு கொண்டுவந்த பெருமை அமைச்சர் விஜயபாஸ்கரையே சாரும். இருவரும் கலந்துபேசிய பிறகு முதல்வரை சந்தித்து, இன்று முதல் தொடர்ந்து கட்சியில் முன்பைப் போல தொய்வின்றி செயல்படுவேன்” என்று தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் விசாரித்தபோதுதான் அமைச்சர் விஜயபாஸ்கரின் வலையில் ரத்தினசபாபதி விழுந்திருப்பது தெரியவருகிறது.

நம்மிடம் பேசிய புதுக்கோட்டை மாவட்ட அதிமுகவினர், “ரத்தினசபாபதி மாவட்ட அதிமுகவின் அவைத் தலைவரக இருந்தார் ரத்தினசபாபதி

அதிமுகவுக்கு 2016 தேர்தலில் புதுக்கோட்டை மாவட்டத்தில் கிடைத்த மூவரில் ( விஜயபாஸ்கர், கந்தவர்க்கோட்டை ஆறுமுகம், அறந்தாங்கி ரத்தினசபாபதி) இவரும் ஒருவர். அப்போதிலிருந்தே விஜயபாஸ்கருடன் அவ்வப்போது முட்டி மோதிக் கொண்டுதான் இருப்பார்.

தினகரன் தனி இயக்கம் கண்டவுடன் விஜயபாஸ்கரை எதிர்ப்பதற்காக அங்கே சென்றுவிட்டார் ரத்தினசபாபதி. அவரது தம்பி பரணி கார்த்திகேயன் ஏற்கனவே அதிமுகவில் இருந்து ஜெயலலிதாவால் நீக்கப்பட்டவர். அதன் பின் அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்த அவர், தினகரன் அமமுக ஆரம்பித்தவுடன் அங்கே சென்று மாவட்டச் செயலாளர் ஆகிவிட்டார். அமமுக மேடைகளில் ரத்தினசபாபதியையும், பரணி கார்த்திகேயனையும் மருது சகோதரர்கள் என்றுதான் அழைப்பார்கள். அந்த அளவுக்கு அமமுகவோடு ஒன்றித்தான் இருந்தார் ரத்தினசபாபதி, ‘எங்களை மீறி விஜயபாஸ்கரால் ஒண்ணும் பண்ண முடியாது’ என்று பலமுறை பேசியிருக்கிறார் அவர்” என்றவர்கள் தொடர்ந்தனர்.

“நேற்று ரத்தினசபாபதி அளித்த பேட்டியில் அமமுக தனிக்கட்சி என்றவுடனேயே அதனை விட்டு விலகிவிட்டேன் என்று சொல்லியிருக்கிறார். ஆனாலும் அமமுக சார்பில் சிவகங்கை மக்களவை வேட்பாளர் தேர்போகி பாண்டி அமமுக கொடியோடு வேட்பு மனு தாக்கல் செய்யச் சென்றபோதே கூடச் சென்றவர் ரத்தினசபாபதி. அதற்கான போட்டோக்களை அவரது ஆதரவாளர்களே ஃபேஸ்புக்குகளில் பதிவிட்டிருக்கிறார்கள்.

அதையெல்லாம் எடுத்து வைத்துக் கொண்ட விஜயபாஸ்கர் அவற்றை ஏற்கனவே கொறடா மூலம் சபாநாயகருக்கு அனுப்பி வைத்துவிட்டார். ஒரு கட்சியில் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் ஒருவர் அந்தக் கட்சிக்கு எதிராக தேர்தல் களம் காணும் யாருக்கு ஆதரவாக (சுயேச்சைக்குக் கூட) செயல்பட்டாலும் அது கட்சிக்கு எதிரான நடவடிக்கையாகத்தான் கருதப்படும். அந்த வகையில்தான் ரத்தினசபாபதிக்கு நோட்டீஸ் அனுப்பினார் சபாநாயகர்.

தினகரன் தேர்தலில் தோல்வி அடைந்ததும் ரத்தினசபாபதியை வளைத்து அதிமுகவில் இழுக்கத் திட்டமிட்டார் விஜயபாஸ்கர். இதுகுறித்து அவரே ரத்தினசபாபதியிடம் பேசியிருக்கிறார்,. ‘அண்ணே… நீங்க என்னை எவ்வளவோ திட்டிருக்கீங்க. எனக்கு எதிராக நிறைய பண்ணியிருக்கீங்க. ஆனா, தேர்தல்ல நீங்க தேர்போகி பாண்டிக்கு வேலை பாத்தீங்கனு எல்லாருக்குமே தெரியும். அதெல்லாமே உங்களுக்கு எதிரான ஆதாரமாதான் இருக்கும். இனிமே அங்க இருந்து என்ன பண்ணப் போறீங்க? தம்பிக்கிட்டையும் பேசுங்க. நானே உங்கள சிஎம் கிட்ட கூட்டிட்டுப் போறேன்’ என்று சொல்லியிருக்கிறார்.

நிலைமை சரியில்லாததை உணர்ந்த ரத்தினசபாபதியும் இதற்கு ஒப்புக் கொண்டு ஏற்கனவே தான் வகித்து வந்த மாவட்ட அவைத் தலைவர் பதவி கிடைச்சா மரியாதையா இருக்கும் என கேட்டிருக்கிறார். ’நீங்க மொதல்ல வாங்க. அப்புறம் அதெல்லாம் பேசிக்கலாம்’ என்று விஜயபாஸ்கர் கூற இருவரும் நேற்று இணைந்து முதல்வரை சந்தித்துவிட்டனர். கூடவே சபாநாயகரையும் சந்தித்துப் பேசியிருக்கிறார்” என்கிறார்கள்.

ரத்தினசபாபதியைத் தொடர்ந்து அவரது தம்பியான பரணி கார்த்திகேயனும் அதிமுகவுக்கு வருவார் என்ற எதிர்பார்ப்பு புதுக்கோட்டை மாவட்டத்தில் ஏற்பட்டுள்ளது. இதன் மூலம், ‘புதுக்கோட்டை அதிமுக என்றால் அது நான் தான் என விஜயபாஸ்கர் மீண்டும் நிரூபிக்க முயல்கிறார்’ என்கிறார்கள் ர.ர.க்கள்.

மேலும் படிக்க

பாமகவுக்கு ராஜ்யசபா: அதிமுக பதில்!

திட்டமிட்டே திமுகவில் இணைந்தேன்: தங்க தமிழ்ச்செல்வன்

பன்னீர்செல்வம் வழக்கு: திமுகவின் கோரிக்கையை ஏற்ற உச்ச நீதிமன்றம்!

தஞ்சை அமமுகவைக் குறிவைத்துக் களமிறங்கிய செந்தில்பாலாஜி

டிஜிட்டல் திண்ணை: வைகோ- நாடாளுமன்றம் செல்ல வழிவிடுமா நீதிமன்றம்?


வேலைவாய்ப்பு: செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ...

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணி!

சிறந்த கொரோனா விழிப்புணர்வு மீம்ஸ்க்கு ரூ.1000!

3 நிமிட வாசிப்பு

சிறந்த கொரோனா விழிப்புணர்வு மீம்ஸ்க்கு ரூ.1000!

டைம் 100: பிரதமர் மோடி, மம்தா பானர்ஜி இடம்பெற்ற காரணம்?

5 நிமிட வாசிப்பு

டைம் 100: பிரதமர் மோடி, மம்தா பானர்ஜி இடம்பெற்ற காரணம்?

புதன் 3 ஜூலை 2019