மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, செவ்வாய், 14 ஜூலை 2020

சர்ச்சையைக் கிளப்பிய சசிரேகா

சர்ச்சையைக் கிளப்பிய சசிரேகா

அதிமுகவில் புதிய செய்தி தொடர்பாளர்கள் பட்டியலை கடந்த ஜூன் 29 ஆம் தேதி அறிவித்தனர். இந்தப் பட்டியலில் அமமுகவில் இருந்து வெளியேறி 28 ஆம் தேதி முதல்வர் முன்னிலையில் அதிமுகவில் சேர்ந்த சசிரேகாவும் செய்தி தொடர்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இன்னும் சொல்லப்போனால் அவர் இணைந்த பிறகு தான் அதிமுகவினருக்கு இதுவரை இடப்பட்ட தடை நீக்கப்பட்டு ஜூலை 1 முதல் ஊடகங்களில் பேசலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அமமுக கட்சியில் இருந்தபோது முதல்வர், துணை முதல்வர் மட்டுமல்லாது அனைத்து அமைச்சர்களையும் சரமாரியாக வசைச் சொற்களால் தாக்கியவர் சசிரேகா. அவர் அதிமுகவில் இணைந்த அடுத்த நாளே செய்தித்தொடர்பாளர் பதவியா என்று பலரும் கொந்தளித்து விட்டனர்.

கடந்த சனிக்கிழமை ஜூன் 29ஆம் தேதி மாலை தகவல் தொழில்நுட்ப அணியை சேர்ந்த பலரும் அமைச்சர் ஜெயக்குமார் வீட்டுக்குச் சென்று அவரை சந்தித்தனர். “சசிரேகா நம்ம கட்சி மேலே கொடுத்த அவதூறுகளை எல்லாம் ஊடகங்கள்லயும், சமூக தளங்கள்லயும் நாங்க முறியடிச்சிருக்கோம்., இதோ பாருங்க சசிரேகா அதிமுகவை பத்தி பேசினதை” என்று அந்த வீடியோக்களை எல்லாம் போட்டுக் காட்டியிருக்கிறார்கள். “இவ்வளவு மோசமான பேசின சசிரேகாவை கட்சில சேர்த்து அவருக்கு உடனடியா பதவி கொடுக்க வேண்டிய அவசியம் என்ன? அதிமுகவுல ஆளே இல்லையா? பெரிய தலைவர்கள் ஏற்கனவே அதிமுகவை எதிர்த்துப் பேசிட்டு இங்க வர்றாங்கன்னா கூட ஒ.கே. ஆனால் சசிரேகா பெரிய தலைவரா?” என்றெல்லாம் ஜெயக்குமாரிடம் கேட்டுள்ளனர். அப்போது அவர்களை சமாதானப்படுத்திய அமைச்சர் ஜெயக்குமார் இதுபற்றி முதல்வரிடம் பேசுவதாகவும் கூறியுள்ளார்.

முதல்வரையும் சந்திக்க அந்த குழுவினர் முயற்சித்தனர். சட்டமன்றம் நடந்து கொண்டிருக்கும் நேரம் என்பதால் முதல்வரை சந்திக்க முடியவில்லை.

இந்த விவகாரத்தை முதல்வரிடமும் தெரியப்படுத்தியிருக்கிறார் அமைச்சர் ஜெயக்குமார். இதையடுத்து விரைவில் அதிமுகவின் புதிய செய்தித் தொடர்பாளர்கள் பட்டியல் வெளியிடப்படும் என்று சொல்கிறார்கள் அதிமுக வட்டாரத்தில்.

மேலும் படிக்க

டிஜிட்டல் திண்ணை: அமமுக தலைமை அலுவலகத்துக்கு ஆபத்து?

தஞ்சை அமமுகவைக் குறிவைத்துக் களமிறங்கிய செந்தில்பாலாஜி

சிவகங்கையில் கார்த்தி சிதம்பரத்தைத் தடுத்தேன்: கே.எஸ்.அழகிரி

திட்டமிட்டே திமுகவில் இணைந்தேன்: தங்க தமிழ்ச்செல்வன்

ஸ்டாலினை சிபிஐ தேடிக் கொண்டிருக்கிறது: சி.வி.சண்முகம்


செவ்வாய், 2 ஜூலை 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon