மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 26 ஜுன் 2019

சட்டவிரோத பேனர்-அரசின் நடவடிக்கையில் திருப்தியில்லை: நீதிமன்றம்!

சட்டவிரோத பேனர்-அரசின் நடவடிக்கையில் திருப்தியில்லை: நீதிமன்றம்!

சட்டவிரோதமாக வைக்கப்படும் பேனர்களுக்கு எதிரான அரசின் நடவடிக்கையில் திருப்தி இல்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சட்டவிரோதமாக வைக்கப்படும் பேனர்களுக்குத் தடை விதிக்கப்பட்டது. ஆனால் பேனர்கள் வைக்கப்படுவது தொடர்கதையாகி வரும் நிலையில், சட்டவிரோத பேனர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்க வில்லை என்று கூறி தமிழக அரசு மீது சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி அவதூறு வழக்குத் தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு நேற்று (ஜூன் 25) நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ் மற்றும் எம்.நிர்மல்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்த போது, சட்டவிரோத பேனர்களுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய அரசு சார்பில் கால அவகாசம் கோரப்பட்டது. இதற்கு, இதுபோன்று தொடர்ந்து கால அவகாசம் கோரினால், உள்துறை செயலாளர் நேரில் ஆஜராக நேரிடும் என்று நீதிபதிகள் எச்சரித்தனர். அரசு சார்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து நாளை (இன்று) விளக்கமளிக்க உத்தரவிட்டனர்.

அதன்படி வழக்கு இன்று(ஜூன் 26) விசாரணைக்கு வந்தபோது தமிழக அரசின் வழக்கறிஞர் ராஜகோபாலன், சட்டவிரோத பேனர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. விதிமீறல் பேனர்களை அச்சிடுவதைத் தடுக்கும் வகையில் அரசு கொண்டு வந்த சட்டத்தை எதிர்த்து அச்சகங்கள் தொடர்ந்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதாகத் தெரிவித்தார்.

இதற்கு, அரசின் நடவடிக்கையில் திருப்தி இல்லை என்று தெரிவித்த நீதிபதிகள், சட்டவிரோத பேனர்களை அரசுதான் தடுக்க வேண்டும், அது நீதிமன்றத்தின் வேலை இல்லை. அரசியல்வாதிகள், பிரபலங்களின் பேனர்களை தினம்தோறும் பார்க்கமுடிகிறது என்று கூறி வழக்கு விசாரணையை ஜூலை 1ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

மேலும் படிக்க

சபரீசன் பேச்சு: சிக்கிய ஆடியோ!

திமுகவுக்கு டிடிவி தினகரன் ஆதரவு!

டிஜிட்டல் திண்ணை: தங்கம் -தினகரன்: உறவை உடைத்த அந்த ஒரு வார்த்தை!

சர்ச்சைக்குரிய விளம்பரம்: கோவை விடுதிக்கு சீல்!

திமுக -காங்கிரஸ் உரசல்: ப.சிதம்பரம் தலையீடு!


ஊக்கத்தொகையும், பாராட்டும் வேண்டாம் : காவலர்களின் குமுறல்!

5 நிமிட வாசிப்பு

ஊக்கத்தொகையும், பாராட்டும் வேண்டாம் : காவலர்களின் குமுறல்!

விழுப்புரத்தில் சாதி மோதலா? நடந்தது என்ன?

9 நிமிட வாசிப்பு

விழுப்புரத்தில்  சாதி மோதலா? நடந்தது என்ன?

தமிழகத்தில் 82% அதிகரித்த கொரோனா பாதிப்பு!

4 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் 82% அதிகரித்த கொரோனா பாதிப்பு!

புதன் 26 ஜுன் 2019