மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, புதன், 13 நவ 2019

பீட்டா தடையை உடைத்த கொரில்லா!

பீட்டா தடையை உடைத்த கொரில்லா!

ஜீவா நடித்துள்ள கொரில்லா திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளது படக்குழு.

டான் சாண்டி இயக்கத்தில் ஜீவா நடித்திருக்கும் படம் கொரில்லா. காமெடி என்டர்டெயினர் ஜானரில் உருவாகியிருக்கும் இந்தப் படத்தில் அர்ஜுன் ரெட்டி படத்தின் நாயகி ஷாலினி பாண்டே ஜீவாவுக்கு ஜோடியாக நடித்துள்ளார். மேலும், சிறப்பம்சமாக நிஜ சிம்பான்சியும் படத்தில் நடித்துள்ளது. எனவே, சிம்பான்சியைத் திரைப்படத்தில் நடிக்கவைத்ததற்கு சர்வதேச விலங்குகள் நல அமைப்பான பீட்டா எதிர்ப்பு தெரிவித்திருந்தது. இதனால் ஜூன் 21ஆம் தேதி வெளியாகவிருந்த கொரில்லாவின் ரிலீஸ் பாதிக்கப்பட்டது.

இதற்குப் பதிலளித்த படக்குழு, பாங்காங்கில் படப்பிடிப்பு நடக்கும் சமயமே விலங்குகள் நல வாரியத்திடம் முறையான அனுமதி பெற்றுதான் அனைத்தும் நடந்துள்ளது எனத் தெரிவித்துள்ளனர். மேலும் கொரில்லா வரும் ஜூலை 5ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக போஸ்டருடன் அறிவித்துள்ளது படக்குழு.

இந்தப் படத்தை ஆல் இன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் பேனரில் விஜய் ராகவேந்திரா தயாரித்துள்ளார். சதீஷ், ராதாரவி, யோகி பாபு போன்றோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சாம்.சி.எஸ் இசையமைத்துள்ளார். குழந்தைகளை ஈர்க்கும் வகையில் அமைந்த இதன் ட்ரெய்லர் சில வாரங்களுக்கு முன் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்று வருகிறது.


மேலும் படிக்க

அதிமுகவுக்கு யெஸ், திமுகவுக்கு நோ சொன்ன தங்கம்

டிஜிட்டல் திண்ணை: சோனியா கோரிக்கை... ஸ்டாலின் நிராகரிப்பு!

மரம்வெட்டி என்று சொன்னால் வெட்டுவோம்: சீறிய ராமதாஸ்

அந்த ஜாம்பவான் போகட்டும்: தங்கத்தை சாடும் தினகரன்

பேசியது பேசியதுதான், கருத்தை மாற்றமாட்டேன்: ராமதாஸ்


திங்கள், 24 ஜுன் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon