மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வெள்ளி, 18 செப் 2020

தேர்தல் ரத்து விவகாரம்: விஷால் மனு தள்ளிவைப்பு!

தேர்தல் ரத்து விவகாரம்: விஷால் மனு தள்ளிவைப்பு!

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் நடத்த போலீஸ் பாதுகாப்பு வழங்கக் கோரிய விஷால் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை இரண்டு வாரங்களுக்கு தள்ளிவைத்துள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் ஓய்வுபெற்ற நீதிபதி பத்மநாபன் தலைமையில் ஜூன் 23ஆம் தேதி டாக்டர் எம்.ஜி.ஆர், ஜானகி மகளிர் கல்லூரியில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் பாதுகாப்பு காரணமாக போலீஸார் அனுமதியளிக்க மறுத்தநிலையில் விஷால் உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை நேற்று(ஜூன் 18) நீதிபதி ஆனந்த வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தது.

நடிகர் சங்க தேர்தல் முக்கியமல்ல, மக்களின் பாதுகாப்பே முக்கியம் எனக் கூறி தேர்தலை வேறு இடத்திற்கு மாற்ற உத்தரவிடப்பட்டது. புறநகர்ப் பகுதிகளில் தேர்தல் நடத்த அறிவுறுத்தப்பட்டதோடு இன்று (ஜூன் 19) எந்த இடத்தில் தேர்தலை நடத்துவது என்பது குறித்து தெரிவிக்கவேண்டும் என்று நீதிமன்றத்தில் அறிவுறுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில் வாக்காளர்களை நீக்கிய விவகாரத்தை காரணம் காட்டி அனைத்து சங்கங்களின் பதிவாளர் தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலை ரத்து செய்து இன்று (ஜூன் 19) காலை உத்தரவிட்டார்.

இந்நிலையில் தேர்தல் எந்த இடத்தில் நடத்துவது என்று ஏற்கெனவே அளிக்கப்பட்ட மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது சங்கங்களின் பதிவாளர் சார்பில் ஆஜரான அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் பி.ஹெச்.அரவிந்த் பாண்டியன், நடிகர் சங்கத் தேர்தல் தொடர்பாக அதன் உறுப்பினர்கள் பலரிடமிருந்து புகார்கள் பெறப்பட்டதைத் தொடர்ந்து தேர்தலை நிறுத்தி வைத்து தென் சென்னை மாவட்ட சங்கங்களின் பதிவாளர் உத்தரவு பிறப்பித்துள்ளதாகக் கூறி, அந்த உத்தரவைத் தாக்கல் செய்தார்.

அப்போது, “தேர்தலே நடத்தக்கூடாது என பதிவாளர் உத்தரவிட்டுள்ள நிலையில், பாதுகாப்பு கோரும் விஷால் வழக்கை தற்போது விசாரிக்க வேண்டிய அவசியமில்லை” என காவல்துறை தரப்பில் ஆஜரான அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஏ.நடராஜன் தெரிவித்தார்.

அவற்றைப் பதிவு செய்த நீதிபதி ஆனந்த வெங்கடேஷ், “தேர்தல் நடத்தக்கூடாது என்ற உத்தரவு அமலில் உள்ளவரை பாதுகாப்பு கோரிய மனுவை விசாரிப்பதால் பலனில்லை. ஒருவேளை அந்த உத்தரவிற்கு தடை விதிக்கப்பட்டால் மட்டுமே பாதுகாப்பு கோரும் மனுவை விசாரிப்பதற்கான வாய்ப்புகள் இருக்கும்” எனக் கூறி வழக்கை 2 வாரத்திற்கு ஒத்திவைத்தார்.

முன்னதாக தேர்தல் ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து பாண்டவர் அணியைச் சேர்ந்த விஷால், பூச்சி முருகன், கருணாஸ் ஆகியோர் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்தனர். அப்போது, நடிகர் சங்கத் தேர்தலை நேர்மையாகவும் அமைதியாகவும் நடத்தக் கோரி மனு அளித்தனர்.

பின்னர் பத்திரிகையாளர்களைச் சந்தித்த விஷால், நீதிமன்ற வழிகாட்டுதல்படி முறையாகவும் பாதுகாப்பாகவும் தேர்தல் நடத்த ஆவண செய்யப்படும் என்று ஆளுநர் கூறியதாக பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார்.


மேலும் படிக்க

டிஜிட்டல் திண்ணை: அன்புமணிக்கு ராஜ்யசபா இல்லை: உடைகிறது அதிமுக-பாமக கூட்டணி?

எடப்பாடி - வேலுமணி இடையே விழுந்த விரிசல்!

ராசா பதவியேற்பு: சம்பவம் அல்ல, சரித்திரம்!

தலித்துகளின் கேள்விகளில் நியாயமே இல்லையா?

பிரேமலதா சமரசம் தோல்வி!


புதன், 19 ஜுன் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon