மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வெள்ளி, 7 ஆக 2020

ஓட்டல்கள் மூடப்படுகிறதா?: உரிமையாளர்கள் பதில்!

ஓட்டல்கள் மூடப்படுகிறதா?: உரிமையாளர்கள் பதில்!

தண்ணீர் தட்டுப்பாட்டால் ஓட்டல்கள் மூடப்படுவதாகக் கூறப்படுவது என்பது முற்றிலும் தவறான தகவல் என்று அமைச்சர் வேலுமணியை சந்தித்த பிறகு ஓட்டல் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. சென்னையைப் பொறுத்தவரை ஐடி நிறுவன ஊழியர்கள் வீட்டிலிருந்தே வேலை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஓட்டல்களில் மதிய உணவு நிறுத்தப்படுவதாக கூறப்பட்டது. இதற்கான அறிவிப்பும் தேனாம்பேட்டை ஆனந்தா ஓட்டல் வாயில் முன்பு வைக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து பேசிய உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி, ஓட்டல்களில் பாக்கு மட்டையில் உணவு வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இன்று (ஜூன் 18), குடிநீர் தட்டுப்பாட்டைச் சமாளிப்பது எப்படி என்பது குறித்து, சென்னை எம்.ஆர்.சி. நகரில் ஓட்டல் உரிமையாளர்களுடன் அமைச்சர் வேலுமணி ஆலோசனை நடத்தினார். அமைச்சருடனான ஆலோசனைக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த ஓட்டல் உரிமையாளர்கள், ஓட்டல்கள் மூடப்படுவதாகக் கூறப்படும் தகவல்கள் முற்றிலும் தவறானது. தமிழக அரசின் நடவடிக்கையால் ஓட்டல்களுக்கு போதுமான தண்ணீர் கிடைத்துக்கொண்டு இருக்கிறது. ஓட்டல்களில் தண்ணீர் தட்டுப்பாடு இல்லை. கூடுதல் விலை கொடுத்து தனியார் குடிநீர் லாரிகள் மூலம் தண்ணீர் பெற்று வருகிறோம். தேனாம்பேட்டை ஆனந்தா முன்பு வைக்கப்பட்டிருந்த அறிவிப்புப் பலகையும் தற்போது இல்லை, அந்த அறிவிப்புப் பலகை எப்படி வந்தது என்பதும் தெரியவில்லை என்று தெரிவித்துள்ளனர்.


மேலும் படிக்க

ராசா பதவியேற்பு: சம்பவம் அல்ல, சரித்திரம்!

டிஜிட்டல் திண்ணை : திமுக- காங்கிரஸ் இழுபறி! களமிறங்கிய எடப்பாடி

ரஞ்சித் குடும்பப் புகைப்படம்: ஹெச்.ராஜா மீது டிஜிபியிடம் புகார்!

வாழ்க பெரியார், வந்தே மாதரம்: தமிழக எம்.பி.க்கள் பதவியேற்பு சுவாரசியங்கள்!

உதயநிதிக்கு வழிவிடுகிறாரா வெள்ளக்கோயில் சாமிநாதன்?


செவ்வாய், 18 ஜுன் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon