மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 8 ஆக 2020

ஷீரடி கோயிலில் கொட்டப்படும் சில்லறைகள்!

ஷீரடி கோயிலில் கொட்டப்படும் சில்லறைகள்!

ஒவ்வொரு வாரமும் குறைந்தபட்சம் 14 லட்சம் ரூபாய் மதிப்பிலான சில்லறைகள் உண்டியலில் கொட்டப்படுவதால், அவற்றை வங்கிகளில் டெபாசிட் செய்ய முடியாமல் திணறி வருகிறது ஷீரடி சாய்பாபா ஆலய நிர்வாகம்.

மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள ஷீரடி சாய்பாபா கோயிலானது நாட்டில் அதிக வருமானம் வரும் கோயில்களில் ஒன்றாக உள்ளது. கடந்த சில வாரங்களாகவே, ஒவ்வொரு முறையும் 14 லட்சம் ரூபாய் சில்லறையானது உண்டியலில் இருந்து கிடைப்பதாகத் தெரிவித்துள்ளது ஆலய நிர்வாகம். வங்கிகள் இதனை ஏற்றுக்கொள்ளாத காரணத்தினால், இந்த சில்லறைகளை வைத்துக்கொண்டு என்ன செய்வது என்று தெரியாமல் திணறி வருகிறது.

இது தொடர்பாக ஸ்ரீ சாய்பாபா சன்ஸ்தானி அறக்கட்டளையின் தலைமை நிர்வாக அலுவலரான தீபக் முக்லிகர் என்டிடிவிக்குப் பேட்டி அளித்துள்ளார். ஒவ்வொரு வாரமும் இரண்டு முறை உண்டியலில் விழும் காணிக்கைகளை எண்ணுவது வழக்கம் என்றும், ஒவ்வொரு முறையும் 2 கோடிக்கும் குறையாமல் பணம் கிடைக்கிறது என்றும், இந்த மொத்தப்பணத்தையும் பெற்றுக்கொள்ள வங்கிகள் மறுத்து வருகின்றன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தற்போது ஸ்ரீ சாய்பாபா சன்ஸ்தானி அறக்கட்டளைக்கு 8 வங்கிகளில் கணக்குகள் உள்ளன. இந்த 8 வங்கிகளும் சில்லறைகளை வைக்க இடமில்லை என்று தெரிவித்ததாகக் கூறியுள்ளது இந்த அறக்கட்டளை.

இந்த விவகாரம் தொடர்பாக, விரைவில் இந்திய ரிசர்வ் வங்கியைத் தொடர்புகொள்ளவிருப்பதாகத் தெரிவித்துள்ளார் முக்லிகர்.


மேலும் படிக்க

டிஜிட்டல் திண்ணை : திமுக- காங்கிரஸ் இழுபறி! களமிறங்கிய எடப்பாடி

ரஞ்சித் குடும்பப் புகைப்படம்: ஹெச்.ராஜா மீது டிஜிபியிடம் புகார்!

உதயநிதிக்கு வழிவிடுகிறாரா வெள்ளக்கோயில் சாமிநாதன்?

முன்கூட்டியே விடுதலையாகிறாரா சசிகலா? விளக்கும் தினகரன்

உயர் மின்னழுத்தக் கோபுரங்களால் பாதிப்பு: எம்பி ஆய்வு!


செவ்வாய், 18 ஜுன் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon