மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, புதன், 27 மே 2020

96 ரீமேக்: படப்பிடிப்பு தளத்தில் விபத்து!

96 ரீமேக்: படப்பிடிப்பு தளத்தில் விபத்து!

96 படத்தின் தெலுங்கு ரீமேக்கின் போது கதாநாயகன் ஷர்வானந்த் விபத்தில் சிக்கியுள்ளார்.

விஜய்சேதுபதி, த்ரிஷா நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் 96. பிரேம் குமார் இயக்கத்தில் உருவாகிய இப்படம் தெலுங்கில் ஷர்வானந்த், சமந்தா நடிப்பில் உருவாகிவருகிறது. பிரேம் குமாரே தெலுங்கிலும் இப்படத்தை இயக்குகிறார்.

தாய்லாந்தில் ஷ்ர்வானந்த் படப்பிடிப்புக்காக ஸ்கை டைவிங் செய்யும் போது எதிர்பாராதவிதமாக விபத்துக்குள்ளானார். உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்ட போதும் தற்போது ஹைதராபாத்தில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. இந்தத் தகவலை தயாரிப்பு தரப்பு வெளியிட்டுள்ளது. மேலும் இரண்டு மாதங்கள் அவர் ஓய்வில் இருக்கவேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியநிலையில் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள படப்பிடிப்பில் கலந்துகொள்ளவுள்ளார்.

96 படத்தின் பெரும்பாலான காட்சிகள் ஒரே நாள் இரவில் நடந்து முடிவதாக காட்டப்பட்டிருக்கும். ‘லைப் ஆஃப் ராம்’ பாடலில் இடம் பெறும் காட்சிகளுக்காக படக்குழு தாய்லாந்தில் படப்பிடிப்பு நடத்தியுள்ளது.

ஷர்வானந்த் தமிழில் வெப்பம், எங்கேயும் எப்போதும் ஆகிய படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களிடையேயும் நல்ல அறிமுகம் பெற்றுள்ளார்.


மேலும் படிக்க

டிஜிட்டல் திண்ணை : திமுக- காங்கிரஸ் இழுபறி! களமிறங்கிய எடப்பாடி

ஓங்குகிறதா ஓபிஎஸ் கை?

முன்கூட்டியே விடுதலையாகிறாரா சசிகலா? விளக்கும் தினகரன்

எடப்பாடி- மோடி: ஏழு நிமிடங்களே நடந்த சந்திப்பு!

உதயநிதிக்கு வழிவிடுகிறாரா வெள்ளக்கோயில் சாமிநாதன்?


செவ்வாய், 18 ஜுன் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon