மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, செவ்வாய், 2 ஜுன் 2020

அரசு மருத்துவமனைகளில் திடீர் ஆய்வு!

அரசு மருத்துவமனைகளில் திடீர் ஆய்வு!

அரசு மருத்துவமனைகளில் திடீர் ஆய்வு நடத்த வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த மே 7ஆம் தேதி மாலை திடீரென பலத்த காற்றுடன் மழை பெய்ததால் அங்கு மின்தடை ஏற்பட்டது. மின்தடை காரணமாக மதுரை ராஜாஜி மருத்துவமனையில் வென்டிலேட்டர் இயங்கவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் மூன்று பேர் உயிரிழந்ததாக உறவினர்கள் குற்றம்சாட்டினர். இதற்கு மருத்துவமனை டீன் வனிதா மறுப்புத் தெரிவித்திருந்தார்.

மூவர் உயிரிழப்பு தொடர்பாகச் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வெரோணிகா என்பவர் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நேற்று (ஜூன் 17) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மதுரைக் கிளை நீதிமன்றத்தின் வரம்புக்கு உட்பட்ட 13 மாவட்டங்களில் உள்ள ஏதேனும் இரண்டு அரசு மருத்துவமனைகளில், திடீர் ஆய்வு செய்ய வேண்டும். அங்குச் செயற்கை சுவாசம், ஜெனரேட்டர்கள் இருக்கிறதா என்றும், உள் கட்டமைப்புகள் வசதிகள் குறித்தும் மூன்று பேர் கொண்ட குழு ஆய்வு நடத்த வேண்டும் என்றும் அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்த அறிக்கையை ஜூலை 23ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிமன்றம் வழக்கு விசாரணையை அன்றைய தினத்துக்கு ஒத்திவைத்துள்ளது.


மேலும் படிக்க

டிஜிட்டல் திண்ணை : திமுக- காங்கிரஸ் இழுபறி! களமிறங்கிய எடப்பாடி

ஓங்குகிறதா ஓபிஎஸ் கை?

முன்கூட்டியே விடுதலையாகிறாரா சசிகலா? விளக்கும் தினகரன்

எடப்பாடி- மோடி: ஏழு நிமிடங்களே நடந்த சந்திப்பு!

உதயநிதிக்கு வழிவிடுகிறாரா வெள்ளக்கோயில் சாமிநாதன்?


செவ்வாய், 18 ஜுன் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon