மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வியாழன், 22 அக் 2020

பொறியியல் கலந்தாய்வு தேதி மாற்றம்!

பொறியியல் கலந்தாய்வு தேதி மாற்றம்!

சான்றிதழ் சரிபார்க்கும் பணிகள் தாமதமான நிலையில், பொறியியல் கலந்தாய்வு தொடங்கும் தேதி மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள அரசுப் பொறியியல் கல்லூரிகள், தனியார் சுயநிதிப் பொறியியல் கல்லூரிகளில் உள்ள 1.75 லட்சம் பி இ, பிடெக் இடங்களுக்கான கலந்தாய்வில் பங்கேற்க, சுமார் 1 லட்சத்து 33 ஆயிரத்து 166 பேர் ஆன்லைனில் விண்ணப்பித்தனர். இதையடுத்து ஜூன் 6 முதல் 11ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டு, ஜூன் 17ஆம் தேதியன்று ரேங்க் பட்டியல் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், சான்றிதழ் பார்க்கும் பணிகளில் 1 லட்சத்து 13 ஆயிரம் பேர் மட்டுமே கலந்துகொண்டனர். இவர்களில் சிலர் முழுமையாகச் சான்றிதழ்களை அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், ரேங்க் பட்டியல் வரும் 20ஆம் தேதி வெளியிடப்படும் என்று அறிவித்தார் தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் அன்பழகன். இதனால், வரும் 20ஆம் தேதியன்று நடைபெறுவதாக இருந்த சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு வரும் 25ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. வரும் ஜூன் 26 அன்று முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகளுக்கும், ஜூன் 27ஆம் தேதியன்று விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கும் கலந்தாய்வு நடைபெறவுள்ளது.

அதே நேரத்தில், பொதுப்பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு வரும் ஜூலை 3ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி நடைபெறும் என்று தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.


மேலும் படிக்க

ஓங்குகிறதா ஓபிஎஸ் கை?

டிஜிட்டல் திண்ணை: ஆட்சிக் கவிழ்ப்பு! மாசெக்களுக்கு தடைபோட்ட ஸ்டாலின்

உலகக் கோப்பை: இந்தியாவிடம் பணிந்த பாகிஸ்தான்!

வைரஸ்: வாழ்வின் மீது நம்பிக்கை ஏற்படுத்தும் படம்!

வெறுங்கையோடு திரும்பியுள்ளார் எடப்பாடி: தாக்கும் ஸ்டாலின்


திங்கள், 17 ஜுன் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon