மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 27 மே 2020

இப்போதே, நீங்கள் இருக்கும் இடத்திலேயே…!

இப்போதே, நீங்கள் இருக்கும் இடத்திலேயே…!

ஒரு கப் காபி

“நமக்கு நாமே ஒத்திசைவுடன் இருத்தல்” என்பதுதான் வெற்றி குறித்த என் விளக்கம். இது உண்மையிலேயே ஒரு பயணம் அல்ல. இது நாம் அடைந்தாக வேண்டிய இடம் என்றும் சொல்ல முடியாது. இது ஒரு மனோநிலை. நீங்கள் உண்மையிலேயே ஒத்திசைவுடன் இருந்தால், அதை வெற்றி என்று சொல்ல மாட்டீர்களா? இப்படி இருந்தால், மேலும் வேண்டும் என்று விரும்பக் கூடாது என்ற அர்த்தமில்லை. நீங்கள் மேலும் செயல்பட விரும்பவில்லை என்று அர்த்தமாகிவிடாது. நீங்கள் வெற்றிகரமாக இருந்தால், இப்போதே, நீங்கள் இருக்கும் இடத்திலேயே, நீங்கள் அடையப் போகும் இடத்திலும் நீங்கள் மன அமைதியுடன் இருக்கிறீர்கள்.

நீங்கள் தனிப்பட்ட முறையிலும், ஆன்மிக முறையிலும், உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் அமைதியாகவும், நேசத்துடனும், நிறைவுடனும், திருப்தியாகவும் இருக்கிறீர்கள். இது இறைவனுடன், உங்கள் குடும்பத்துடன், உங்களுடனும் பொதுவாக வாழ்க்கையில் நமக்கு நாமே ஒத்திசைவுடன் இருத்தல்.

நமக்கு நாமே ஒத்திசைவுடன் இருப்பதற்காக, சரியானவற்றைத்தான் செய்துகொண்டிருக்கிறோம் என்று ஒருவர் உணர வேண்டும். நாம் நம் திறமைகளைப் பயன்படுத்துகிறோம், அப்போது கடவுளுக்குச் சரியான முறையில் சேவை செய்துகொண்டிருக்கிறீர்கள், நமக்கும், நம் சமுதாயத்துக்கும், நம் குடும்பத்துக்கும் நம் வாழ்க்கைக்கும் உண்மையிலேயே முக்கியமான ஒன்றைச் செய்கிறோம். இதுதான் ஆசுவாசத்துடன் இருத்தல். இதுதான் வெற்றி.

80% மக்கள் தங்கள் பணியை விருப்பமில்லாமலேயே செய்துகொண்டிருக்கிறார்கள். எந்த இடத்திற்கு உங்களுக்குப் போக விருப்பம் இல்லையோ அங்கு போவதும் அல்லது எதைச் செய்ய உங்களுக்கு விருப்பம் இல்லையோ அதைச் செய்யவதும் மிகவும் கஷ்டம்.

சில நேரங்களில் மிகவும் எளிமையானர்களை வெற்றியாளர்கள் என்று கூறுவேன். உதாரணமாக, அபாரமான பெருமிதத்துடன் ஒரு கட்டடத்தைச் சுத்தம் செய்துகொண்டிருப்பவர். தான் செய்வதை அனுபவித்துச் செய்கிறவர்களும் உண்டு.

மிகவும் ஆசுவாசமாகவும், தாங்கள் செய்பவற்றை நேசிப்பவர்களாகவும் இருப்பவர்களையே வெற்றிகரமானவர்கள் என்று நான் நினைக்கிறேன்.

- மைக்கேல் ஏ. பொடோலின்ஸ்கி

( மைக்கேல் ஏ. பொடோலின்ஸ்கி அமெரிக்காவைச் சேர்ந்த வாழ்வியல் திறன் பயிற்சியாளர், பேச்சாளர்.)

நன்றி: வெற்றி குறித்த உரையாடல்கள், வெளியீடு: சக்சஸ் ஞான்

திங்கள், 17 ஜுன் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon