மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 2 ஜூலை 2020

ரோஹித் செஞ்சுரி: மழைக்கு வெற்றி!

ரோஹித் செஞ்சுரி: மழைக்கு வெற்றி!

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையேயான உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின்போது திடீரென மழை பொழியத் தொடங்கியதால் கிரிக்கெட் ரசிகர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் கே.எல்.ராகுல் 78 பந்துகளுக்கு 57 ரன்களைக் குவித்து ஆட்டமிழந்தார். அவருடன் கூட்டணி அமைத்த ரோஹித் சர்மா 113 பந்துகளுக்கு 140 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். ரோஹித் சர்மா மூன்று சிக்ஸர், 14 பவுண்டரிகளை விளாசினார்.

பின்னர் களமிறங்கிய கேப்டன் விராட் கோலி ஆட்டமிழக்காமல் 62 பந்துகளில் 71 ரன்களைக் குவித்தார். ஹர்திக் பாண்ட்யா 19 பந்துகளில் 26 ரன்களை எடுத்தார். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தோனி 2 பந்துகளில் ஒரு ரன் எடுத்து ஆட்டமிழந்தார். விஜய் சங்கர் 6 பந்துகளில் 3 ரன்களை எடுத்தார். மொத்தம் நான்கு விக்கெட்டுகளுக்கு 46.4 ஓவர்களில் இந்திய அணி 305 ரன்களைக் குவித்திருந்தது. அனல்பறந்த ஆட்டக்களத்தில் திடீரென மழை பொழியத் தொடங்கியதால் ஆட்டம் முடங்கியது.

இந்தியா, பாகிஸ்தான் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் இப்போட்டியை எதிர்பார்த்த கிரிக்கெட் ரசிகர்களுக்கும் மழை ஏமாற்றமளித்துள்ளது.


மேலும் படிக்க

டிஜிட்டல் திண்ணை: தினகரன் -அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ரகசிய சந்திப்பு!

பிரசாந்த் கிஷோர்- எடப்பாடி சந்திப்பு: கட்சியைக் கைப்பற்ற ஸ்பெஷல் வியூகம்!

முதல்வரை வரவேற்காத பன்னீர்செல்வம் மகன்!

விஜய் ரசிகர்களுக்கு மோகன் ராஜாவின் உறுதிமொழி!

அதிமுக: அந்த 11 பேர் குழுவில் யார் யார்?


ஞாயிறு, 16 ஜுன் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon