மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, புதன், 27 மே 2020

விஷால் மீது பாக்கியராஜ் அணியினர் புகார்!

விஷால் மீது பாக்கியராஜ் அணியினர் புகார்!

ஜூன் 23ஆம் தேதியன்று தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கான தேர்தல் நடைபெறவுள்ளது. இத்தேர்தலில் நாசர் தலைமையிலான பாண்டவர் அணியும், அவர்களை எதிர்த்து பாக்கியராஜ் தலைமையிலான சுவாமி சங்கரதாஸ் அணியும் போட்டியிடுகின்றன. இந்நிலையில், தேர்தல் நடப்பதில் உள்ள சிக்கல்கள் மற்றும் சங்கத்தின் முன்னாள் செயலாளர் விஷாலின் போக்கு குறித்து பாக்கியராஜ் அணியினர் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர்.

பாக்கியராஜ், ஐசரி கணேஷ் உள்ளிட்ட சுவாமி சங்கரதாஸ் அணியினர் இன்று (ஜூன் 16) சென்னை தியாகராய நகரிலுள்ள நடிகர் சங்க அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினர். அப்போது பேசிய பாக்கியராஜ், “தேர்தல் அதிகாரி மூலமாக வெளிவர வேண்டிய சில அறிக்கைகள் விஷால் பெயரில் வருகின்றன. தேர்தல் அதிகாரிதான் அறிவிப்புகளை வெளியிட வேண்டும். அதை விஷால் வெளியிடுவது எங்களுக்கு புரியவில்லை. இவ்விவகாரம் தொடர்பாக புகார் மனு அளித்துள்ளோம்” என்று தெரிவித்தார்.

அவரைத் தொடர்ந்து பேசிய ஐசரி கணேஷ், “நேற்று (ஜூன் 15) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது நடிகர் விஷால் 1100 தபால் வாக்குகள் ஏற்கெனவே பதிவாகிவிட்டதாக தெரிவித்திருந்தார். இந்தத் தேர்தலை ஓய்வுபெற்ற நீதிபதி பத்மநாபன் நடத்துகிறாரா அல்லது விஷால் நடத்துகிறாரா என்கிற சந்தேகம் எங்களுக்கு வந்துள்ளது. நேரில் வந்து பார்த்தால், சங்கத்திலிருந்து 300 வாக்காளர்களை நீக்கி 450 வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாகவும், அதுபற்றிய தகவல் கவனத்திற்கு வராததால் விளக்கம் கேட்டு சங்கங்கள் பதிவாளர் அலுவலகத்திலிருந்து நோட்டீஸ் வந்துள்ளது.

சத்யா ஸ்டூடியோஸில் தேர்தல் நடைபெறும் என்று நாம் எதிர்பார்த்துக்கொண்டு இருக்கும்போது, இடத்தை மாற்றும்படி சத்யா ஸ்டூடியோஸ் நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளது. அவர்கள் தேர்தல் நடத்த அனுமதியளிக்கவில்லை. தேர்தலுக்கு பாதுகாப்பு கோரி காவல் ஆணையரிடம் விஷால் மனு கொடுத்துள்ளார். தேர்தலில் வேட்பாளராக போட்டியிடும் விஷால் எப்படி மனு கொடுக்க முடியும். ஆகையால், எல்லாவற்றிற்கும் விளக்கம் கேட்டு தேர்தல் நடக்குமா நடக்காதா, எங்கு நடக்கும் போன்ற விவரங்களைக் கேட்டு தேர்தல் அதிகாரியிடம் மனு கொடுத்துள்ளோம். அவரும் பதிலளிப்பதாக தெரிவித்துள்ளார்” என்று கூறினார்.


மேலும் படிக்க

டிஜிட்டல் திண்ணை: தினகரன் -அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ரகசிய சந்திப்பு!

பிரசாந்த் கிஷோர்- எடப்பாடி சந்திப்பு: கட்சியைக் கைப்பற்ற ஸ்பெஷல் வியூகம்!

முதல்வரை வரவேற்காத பன்னீர்செல்வம் மகன்!

விஜய் ரசிகர்களுக்கு மோகன் ராஜாவின் உறுதிமொழி!

அதிமுக: அந்த 11 பேர் குழுவில் யார் யார்?


ஞாயிறு, 16 ஜுன் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon