தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) அமைப்பைச் சேர்ந்த அதிகாரிகள் கடந்த வாரம் கோவை உக்கடம் பகுதியில் திடீர் சோதனை நடத்தினர். ஐ.எஸ். இயக்கத்துக்கு ஆதரவாளர்களாக இருக்கிறார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் உக்கடம் கரும்புக் கடை, அன்பு நகர் உள்ளிட்ட ஏழு இடங்களில் சோதனை நடத்தி மூவரைக் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பியுள்ளனர்.
இந்த நிலையில் நேற்று (ஜூன் 15) இரவு முதல் மதுரையிலும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனையில் ஈடுபடத் தொடங்கினார்கள். மதுரை வில்லாபுரம் பகுதியில் இருக்கும் ஒரு இளைஞரை அழைத்துச் சென்று அவரது வீட்டில் சோதனை நடத்தினார்கள். நேற்று நள்ளிரவு வரை நடந்த இந்த சோதனைக்குப் பின்னர், கொச்சியில் இருந்து வந்த என்.ஐ.ஏ. டீம் அந்த இளைஞரை அவரது வீட்டிலேயே விட்டுவிட்டு சென்றுவிட்டனர்.
இதுபற்றி மதுரை போலீஸ் வட்டாரங்களில் விசாரித்தபோது, “மதுரை வில்லாபுரம் பகுதியில் இருக்கும் ஓர் இளைஞரைப் பற்றிய சந்தேகத்தோடு கொச்சியில் இருந்து என்.ஐ.ஏ. டீம் ஒன்று மதுரைக்கு வந்தது. சந்தேகத்துக்குரிய அந்த குறிப்பிட்ட இளைஞரின் வீட்டுக்குச் சென்று சோதனையிட்டனர். அப்போது அந்த இளைஞர் லக்னோவில் இருக்கும் அரபி கல்லூரியில் படிப்பதாகவும் அவர் விடுமுறையில் மதுரைக்கு வந்திருப்பதாகவும் தெரியவந்தது. அவர் மீது சந்தேகப்பட்ட என்ஐஏ. அதிகாரிகள் விசாரணை முடிவில் அவரை வீட்டிலேயே விட்டு சென்றனர்” என்றனர்.
இலங்கை குண்டு வெடிப்பை அடுத்து தென்னிந்தியாவில் ஐஎஸ் இயக்கத்தோடு தொடர்பில் இருப்பவர்கள் என சந்தேகப்படும் சிலரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கண்காணித்து, அவர்களின் இருப்பிடங்களில் சோதனையிட்டு கைது நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். பாலக்காடு, கோவையில் நடந்த சோதனையை அடுத்து மதுரையிலும் சோதனை நடத்தச் சென்றிருக்கிறார்கள்.
ஐஎஸ் இயக்கத்துக்காக சமூக தளங்களுக்காக ஆதரவுப் பிரச்சாரம் செய்து ஐ எஸ் இயக்கத்துக்கு ஆள் சேர்க்கும் பணியில் ஈடுபட்டதாக கேரளா, தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆறு பேர் மீது இதுவரை வழக்குப் பதிவு செய்திருக்கிறது என்.ஐ.ஏ.
மேலும் படிக்க
டிஜிட்டல் திண்ணை: தினகரன் -அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ரகசிய சந்திப்பு!
பிரசாந்த் கிஷோர்- எடப்பாடி சந்திப்பு: கட்சியைக் கைப்பற்ற ஸ்பெஷல் வியூகம்!
முதல்வரை வரவேற்காத பன்னீர்செல்வம் மகன்!
விஜய் ரசிகர்களுக்கு மோகன் ராஜாவின் உறுதிமொழி!
அதிமுக: அந்த 11 பேர் குழுவில் யார் யார்?