மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வெள்ளி, 14 ஆக 2020

ஐரோப்பாவில் முகாமிடும் அக்னி சிறகுகள் குழு!

ஐரோப்பாவில் முகாமிடும் அக்னி சிறகுகள் குழு!

அக்னி சிறகுகள் படக்குழு மூன்றாம் கட்ட படப்பிடிப்புப் பணிகளுக்காக ஐரோப்பாவில் முகாமிடத் திட்டமிட்டுள்ளது.

மகிழ் திருமேனி இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் உருவான தடம் திரைப்படம் ரசிகர்களிடையே வலுவான வரவேற்பைப் பெற்றது. விஜய் ஆண்டனி நடிப்பில் சில தினங்களுக்கு முன் வெளியான கொலைகாரன் திரைப்படமும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. தற்போது அருண் விஜய்யும், விஜய் ஆண்டனியும் இயக்குநர் நவீனின் அக்னி சிறகுகள் படத்தின் பணிகளில் இணைந்துள்ளனர். இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் கோவா, ஹைதராபாத்தில் நடைபெற்று வருகின்றன. இதைத் தொடர்ந்து படக்குழுவினர் ஐரோப்பாவில் 50 நாட்களுக்கு முகாமிடத் திட்டமிட்டுள்ளனர். அங்கு படத்தின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்படவுள்ளது.

இந்தச் செய்தியை இயக்குநர் நவீன் தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார். அவர், “அக்னி சிறகுகளின் மூன்றாம் கட்ட படப்பிடிப்புக்காகத் தயாராகி வருகிறோம். ஐரோப்பாவில் 50 நாட்கள் ஆக்‌ஷன் நிறைந்த காட்சிகள் படமாக்கப்படும். படத்தின் நாயகர்கள் அருண் விஜய்யும், விஜய் ஆண்டனியும் தங்களது உடலை மெருகேற்ற எடுத்த முயற்சிகளுக்காகவும், அவர்களது அர்ப்பணிப்புக்காகவும் நான் பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். இந்தப் படத்தில் ஷாலினி பாண்டே, நாசர், பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். நடராஜன் சங்கரன் இசையமைக்கிறார்.


மேலும் படிக்க

டிஜிட்டல் திண்ணை: தினகரன் -அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ரகசிய சந்திப்பு!

முதல்வரை வரவேற்காத பன்னீர்செல்வம் மகன்!

குடிநீருக்கான பணம் குப்பைத்தொட்டிக்குப் போனது: துரைமுருகன்

அதிமுக: அந்த 11 பேர் குழுவில் யார் யார்?

தினகரன் தளபதிக்கு எடப்பாடி தூது: ஜெயக்குமார் எதிர்ப்பு!


ஞாயிறு, 16 ஜுன் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon