மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 1 ஜுன் 2020

கிச்சன் கீர்த்தனா: முட்டைப் பணியாரம்

கிச்சன் கீர்த்தனா: முட்டைப் பணியாரம்

சன்டே ஸ்பெஷல்

இன்று பட்டிதொட்டிக் கடைகள் முதல் ஃபைவ் ஸ்டார் ஹோட்டல்கள் வரை எல்லா மெனுவிலும் இடம்பிடித்திருக்கும் 'ஆல் டைம் ஃபேவரிட்' அயிட்டம் பணியாரம். ஆனால், சில வீடுகளில் பணியாரம் செய்வது என்பது விசேஷ நாட்களில் ஒன்றாகிவிட்டது. வெளியே லேசான மொறுமொறுப்புடனும் உள்ளே பஞ்சைப் போன்ற மிருதுவுடனும் நினைத்தாலே இனிக்கும் பணியாரங்கள், பாட்டி சொல்லும் கதையை விடவும் அதிக இனிப்போடு நம் ஞாபகத்தில் தங்கியிருப்பவை. அந்த வகை பணியாரங்களில் ஒன்று இந்த முட்டைப் பணியாரம்.

என்ன தேவை?

முட்டை – 2

பெரிய வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்)

பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கவும்)

கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழை - சிறிதளவு (பொடியாக நறுக்கவும்)

மஞ்சள் தூள் - ஒரு டீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

இட்லி மாவு - 2 கரண்டி

எண்ணெய் - தேவையான அளவு

கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு - ஒரு டீஸ்பூன்

எப்படிச் செய்வது?

ஒரு பவுலில் இட்லி மாவுடன் உடைத்த முட்டை, பெரிய வெங்காயம், மஞ்சள் தூள், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழை, உப்பு சேர்த்து நன்கு அடித்துக்கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு சேர்த்துத் தாளித்து இட்லி மாவில் சேர்த்துக் கலக்கவும். பணியாரக் கல்லை அடுப்பில் வைத்து குழிகளில் கால்வாசி அளவுக்கு எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். இனி, கலந்துவைத்துள்ள இட்லி முட்டை மாவுக் கலவையை ஒவ்வொரு பணியாரக் குழியிலும் ஊற்றி வேகவிடவும். வெந்ததும் ஒரு குச்சியால் பணியாரத்தைத் திருப்பிவிட்டு மறுபக்கமும் வேகவைத்து சூடாக எடுத்துப் பரிமாறவும்.

என்ன பயன்?

முட்டையில் உடல் வளர்ச்சிக்குத் தேவையான சத்துகள் நிரம்பியுள்ளன. பொதுவாக 44 - 50 கிராம் எடையுள்ள முட்டையில் 70 கிலோ கலோரிகள் எரிசக்தியும் (Energy), 6 கிராம் புரோட்டீனும் இருக்கும். அதனால்தான் இதனை உலகின் மிகச் சிறந்த உணவு வகைகளில் ஒன்றாகச் சொல்கிறார்கள். அப்படிப்பட்ட முட்டையில் செய்யப்படும் இந்தப் பணியாரம் அனைத்து வயதினருக்கும் ஏற்றது.

நேற்றைய ரெசிப்பி: வாழைப்பூ பணியாரம்


மேலும் படிக்க

டிஜிட்டல் திண்ணை: தினகரன் -அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ரகசிய சந்திப்பு!

முதல்வரை வரவேற்காத பன்னீர்செல்வம் மகன்!

குடிநீருக்கான பணம் குப்பைத்தொட்டிக்குப் போனது: துரைமுருகன்

அதிமுக: அந்த 11 பேர் குழுவில் யார் யார்?

தினகரன் தளபதிக்கு எடப்பாடி தூது: ஜெயக்குமார் எதிர்ப்பு!


ஞாயிறு, 16 ஜுன் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon