மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 15 நவ 2019

விஜய் ரசிகர்களுக்கு மோகன் ராஜாவின் உறுதிமொழி!

விஜய் ரசிகர்களுக்கு மோகன் ராஜாவின் உறுதிமொழி!

ஜெயம் ரவி நடிப்பில் வெளியான தனி ஒருவன் திரைப்படம் இயக்குநர் மோகன் ராஜாவுக்கு மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. தொடர்ந்து ரீமேக் படங்களை மட்டும் இயக்கி வந்த மோகன் ராஜா தனி ஒருவன் திரைப்படம் மூலம் தனக்கென ஒரு முத்திரையைப் பதித்தார். இந்தப் படத்தைத் தொடர்ந்து சிவகார்த்திகேயனை வைத்து மோகன் ராஜா இயக்கிய வேலைக்காரன் திரைப்படமும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்போது மோகன் ராஜா தனி ஒருவன் இரண்டாம் பாகத்துக்கான பணிகளில் இறங்கியுள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் இந்தாண்டின் இறுதியில் தொடங்கவுள்ளது.

நடிகர் விஜய்யை வைத்து மற்றொரு படத்தை இயக்கவுள்ளதாகவும் மோகன் ராஜா சில மாதங்களுக்கு முன் அறிவித்திருந்தார். இந்த நிலையில், விஜய்யுடன் இணைய வேண்டிய படம் தாமதமானதற்கான காரணம் குறித்து மோகன் ராஜா விளக்கமளித்துள்ளார். இதுபற்றி யூடியூப் சேனல் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், “விஜய்யுடனான படம் தாமதமானதற்கு என்னுடைய தவறுதான் காரணம். படத்துக்காக விஜய் தயாராக இருக்கிறார். படம் பற்றி அடிக்கடி என்னிடம் கேட்டுத் தெரிந்துகொள்வார். அவருக்கு தனி ஒருவனும், வேலைக்காரனும் மிகவும் பிடித்திருந்தது.

என்னுடைய வாழ்வில் மிகவும் முக்கியமான நபர். அவரது நட்பு எனக்கு மிகவும் முக்கியம். ஆனால், தனி ஒருவன் இரண்டாம் பாகத்துக்குப் பிறகுதான் விஜய்யின் படத்தைத் தொடங்க வேண்டும் என்று நான் விடாப்பிடியாக இருந்துவிட்டேன். என்னால் படம் தாமதமாவதற்கு விஜய் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். அவரது ரசிகர்கள் எனக்கு எப்போதும் ஆதரவளித்துள்ளனர். ஆனால், அவர்களின் பொறுமைக்கு ஏற்ப நிச்சயம் நல்ல படமாகக் கொடுப்பேன்” என்று தெரிவித்தார்.


மேலும் படிக்க

டிஜிட்டல் திண்ணை: தினகரன் -அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ரகசிய சந்திப்பு!

முதல்வரை வரவேற்காத பன்னீர்செல்வம் மகன்!

குடிநீருக்கான பணம் குப்பைத்தொட்டிக்குப் போனது: துரைமுருகன்

அதிமுக: அந்த 11 பேர் குழுவில் யார் யார்?

தினகரன் தளபதிக்கு எடப்பாடி தூது: ஜெயக்குமார் எதிர்ப்பு!


ஞாயிறு, 16 ஜுன் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon