மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, சனி, 11 ஜூலை 2020

விரைவில் இந்தியாவில் ரெட்மி கே20 சீரிஸ்!

விரைவில் இந்தியாவில் ரெட்மி கே20 சீரிஸ்!

ரெட்மி கே20 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் விரைவில் இந்தியாவிலும் வெளியாகவுள்ளன. இன்னும் சில வாரங்களில் கே20 சீரிஸ் இந்தியாவில் வெளியாகும் என்று ஷோமி இந்தியாவின் நிர்வாக இயக்குநர் வி.பி.மனு ஜெயின் தெரிவித்துள்ளார். எந்தத் தேதியில் வெளியாகும் என்ற விவரத்தை அவர் வெளியிடாவிட்டாலும், ஜூலை மத்தியில் ரெட்மி கே20, ரெட்மி கே20 ப்ரோ ஆகிய ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் வெளியாகும் என்று தெரிவித்துள்ளார்.

ஏற்கெனவே வெளியான போகோ எஃப்1 ஸ்மார்ட்போன் நுகர்வோரிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து போகோ எஃப்2 வெளியாகும் என்று இந்திய வாடிக்கையாளர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். இந்நிலையில் இந்தியாவில் ரெட்மி கே20 ப்ரோ வெளியாகும் என்று ஷோமி தெரிவித்துள்ளது. ரெட்மி கே20 ப்ரோவில் ஸ்னாப்ட்ராகன் 855 பிராசஸர் உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் வெளியாவதால் போகோ எஃப்2 வெளியாகுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இதுகுறித்து ஷோமி நிர்வாகமும் விளக்கமளிக்கவில்லை. இதனால் போகோ ரசிகர்கள் அதிருப்தியடைந்துள்ளனர். சீனாவில் ரெட்மி கே20 ப்ரோவின் விலை சுமார் ரூ.25,000ஆக உள்ளது. இந்தியாவிலும் இதற்கு நிகரான விலை நிர்ணயிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், சீனாவில் நிர்ணயிக்கப்பட்டுள்ள விலையைக் காட்டிலும் இந்தியாவில் குறைந்த விலை நிர்ணயிக்கப்படலாம் என்று சில தகவல்கள் வெளியாகியுள்ளன.


மேலும் படிக்க

முதல்வரை வரவேற்காத பன்னீர்செல்வம் மகன்!

குடிநீருக்கான பணம் குப்பைத்தொட்டிக்குப் போனது: துரைமுருகன்

அதிமுக: அந்த 11 பேர் குழுவில் யார் யார்?

டிஜிட்டல் திண்ணை: ஆட்சிக் கலைப்பு- ஸ்டாலினை குறிவைக்கும் வருமான வரித்துறை!

தினகரன் தளபதிக்கு எடப்பாடி தூது: ஜெயக்குமார் எதிர்ப்பு!


சனி, 15 ஜுன் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon