மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 2 ஜூலை 2020

வெளியானது ‘ஜீவி’ டீசர்!

வெளியானது ‘ஜீவி’ டீசர்!

‘8 தோட்டாக்கள்’ படத்தை தயாரித்த வெற்றிவேல் சரவணா சினிமாஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் ‘ஜீவி’ படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

‘8 தோட்டாக்கள்’ திரைப்படத்தில் நடித்த வெற்றி கதாநாயகனாக நடிக்கும் ‘ஜீவி’படத்தில் அஸ்வினி, மோனிகா இருவரும் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். வி.ஜே.கோபிநாத் இயக்கும் இப்படத்தில் கருணாகரன், ரோஹினி, மைம் கோபி, உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பிரவீன் குமார் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்திற்கு, பாபு தமிழ் கதை எழுதியுள்ளார். இப்படத்திற்கு கே.எஸ் சுந்தரமூர்த்தி இசையமைத்துள்ளார்.

வேறுபட்ட கதைக்களம் மற்றும் முற்றிலும் மாறுபட்ட திரைக்கதையுடன் சஸ்பென்ஸ் த்ரில்லராக உருவாகியுள்ள ‘ஜீவி’ படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றுள்ளது. டீசரில் இடம்பெறும், “மனுஷனுக்கு வரக்கூடாத வியாதி- விரக்தி”, “லைஃப்ல ஒருத்தன் பெரிய ஆள் ஆகாத வரைக்கும் அவன இந்த ஊர் சராசரி மனுஷனா தான் பாக்கும். அதே அவன் கஷ்டப்பட்டு முயற்சி பண்ணி பெரிய ஆள் ஆயிட்டான்னு வச்சுக்க அவன் ஜாதி என்ன அவன் மதம் என்னன்னு தான் பேசுவாங்க, அவன் பெருமையை எவனும் பேச மாட்டான்” போன்ற வசனங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளதோடு, ரசிகர்கள் மத்தியில் கூடுதல் எதிர்ப்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

‘ஜீவி’டீசர்

சனி, 15 ஜுன் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon