மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வெள்ளி, 14 ஆக 2020

வெயில் தாக்கம்: அதிகரிக்கும் ஏசி விற்பனை!

வெயில் தாக்கம்: அதிகரிக்கும் ஏசி விற்பனை!

கோடை வெப்பம் காரணமாக மக்களிடையே தேவை அதிகரித்துள்ளதால் ஏசி உள்ளிட்ட குளிர்சாதன வீட்டு உபயோகப் பொருட்களுக்கான விற்பனை இருமடங்கு வளர்ச்சி கண்டுள்ளது.

ஹெச்.டி.எஃப்.சி. செக்யூரிட்டீஸ் நிறுவனம் சார்பாக இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் ஃபிரிட்ஜ் மற்றும் ஏசி ஆகிய உபகரணங்களுக்கான சந்தை மதிப்பு 20 சதவிகிதம் வளர்ச்சி கண்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது. நுகர்வோர் மின்சாதனப் பொருட்கள் உற்பத்தியாளர் கூட்டமைப்பின் தலைவர் கமல் நந்தி இதுகுறித்து தி ஏசியன் ஏஜ் ஊடகத்திடம் கூறுகையில், “ஃபிரிட்ஜ் விற்பனை 12 முதல் 15 சதவிகிதம் வரையிலும், ஏசி விற்பனை 18 முதல் 20 சதவிகிதம் வரையிலும் உயர்ந்துள்ளது.

மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் தென்னிந்திய மாநிலங்களில் வீட்டு உபயோக குளிர்சாதனப் பொருட்களுக்கான தேவை மிக அதிகமாக இருந்தது. ஏப்ரல் மாத இறுதியிலும் மே மாதத்திலும் கிழக்கு மற்றும் வட இந்திய மாநிலங்களில் அதிக வெப்பத்தால் இப்பொருட்களுக்கான தேவை அதிகமாக இருந்தது. ஒட்டுமொத்தமாக மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு வீட்டு உபயோக குளிர்சாதனப் பொருட்களுக்கான தேவை அதிகரித்துள்ளது. பணமதிப்பழிப்பு மற்றும் ஜிஎஸ்டி அமல்படுத்திய பிறகு, 2018ஆம் ஆண்டில் இப்பொருட்களுக்கான தேவை சரிவைச் சந்தித்திருந்தது” என்றார்.

சென்ற ஆண்டில் வீட்டு உபயோக குளிர்சாதனப் பொருட்களுக்கான விற்பனை 6 சதவிகிதம் வரையில் சரிவைச் சந்தித்திருந்த நிலையில் இப்போது விற்பனை 20 சதவிகிதம் வளர்ச்சி கண்டுள்ளது.


மேலும் படிக்க

டிஜிட்டல் திண்ணை: ஆட்சிக் கலைப்பு- ஸ்டாலினை குறிவைக்கும் வருமான வரித்துறை!

தினகரன் தளபதிக்கு எடப்பாடி தூது: ஜெயக்குமார் எதிர்ப்பு!

அதிமுக: அந்த 11 பேர் குழுவில் யார் யார்?

மூடப்படும் அருவிகள்: கேரளத்தில் பண மழை!

பாக்கியராஜ் அணிக்கு விஜயகாந்த் ஆதரவு!


சனி, 15 ஜுன் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon