மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, புதன், 27 மே 2020

தமிழக கோரிக்கைகள்: பிரதமரை சந்தித்த முதல்வர்!

தமிழக கோரிக்கைகள்: பிரதமரை சந்தித்த முதல்வர்!

பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி நிலுவைத் தொகை, வளர்ச்சித் திட்டங்கள் தொடர்பான கோரிக்கை மனுவினையும் அளித்தார்.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நிதி ஆயோக்கின் 15ஆவது கூட்டம் இன்று (ஜூன் 15) டெல்லியிலுள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக தமிழகத்திலிருந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர் ஜெயக்குமார், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் மற்றும் உயரதிகாரிகள் டெல்லி சென்றனர்.

டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் நேற்றிரவு தங்கிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இன்று (ஜூன் 15) நிதி ஆயோக் கூட்டம் தொடங்குவதற்கு முன்னதாக பிரதமர் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார். அப்போது, தமிழகத்தின் தற்போது நிலவி வரும் பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து அவரிடம் ஆலோசனை நடத்தினார். தமிழகத்திற்கான வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் நிலுவையில் உள்ள தொகைகளை வழங்கக்கோரும் கோரிக்கைகள் அடங்கிய மனுவினையும் பிரதமரிடம் சமர்ப்பித்தார். குறுகிய நேரம் மட்டும் நடந்த இந்த சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களை சந்திக்காமலேயே புறப்பட்டுச் சென்றார்.

இதனைத் தொடர்ந்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனையும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்தித்தார். விரைவில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், தமிழகத்திற்கான நிதி விவகாரங்கள் தொடர்பாகவும், கூடுதல் திட்டங்கள் ஒதுக்கும்படி அவரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், உள் துறை அமைச்சர் அமித் ஷா, நீர்வளத் துறை அமைச்சர் நிதின் கட்கரி ஆகியோரையும் சந்தித்து பேசவுள்ளார் என்று கூறப்படுகிறது.


மேலும் படிக்க

டிஜிட்டல் திண்ணை: ஆட்சிக் கலைப்பு- ஸ்டாலினை குறிவைக்கும் வருமான வரித்துறை!

தினகரன் தளபதிக்கு எடப்பாடி தூது: ஜெயக்குமார் எதிர்ப்பு!

அதிமுக: அந்த 11 பேர் குழுவில் யார் யார்?

மூடப்படும் அருவிகள்: கேரளத்தில் பண மழை!

பாக்கியராஜ் அணிக்கு விஜயகாந்த் ஆதரவு!


சனி, 15 ஜுன் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon