மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, திங்கள், 28 செப் 2020

குடிநீருக்கான பணம் குப்பைத்தொட்டிக்குப் போனது: துரைமுருகன்

குடிநீருக்கான பணம் குப்பைத்தொட்டிக்குப் போனது: துரைமுருகன்

குடிநீருக்கு ஒதுக்கவேண்டிய நிதியை அதிமுக அரசு குப்பைத்தொட்டிகளுக்காகச் செலவிட்டது என்று திமுக பொருளாளர் துரைமுருகன் குற்றம்சாட்டியுள்ளார்.

வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை துரைமுருகன் நேற்று (ஜூன் 13) திறந்து வைத்தார். அதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய துரைமுருகன், “தேர்தலுக்குப் பிறகு அதிமுகவினர், குறிப்பாக அமைச்சர்களும் அவர்களை சார்ந்தவர்களும் நிலைகுலைந்து போயிருக்கின்றனர். அதனால் நிர்வாகத்தில் என்ன நடக்கிறது என்று அவர்களுக்குத் தெரியவில்லை. குடிநீர் பிரச்சினை உயிர்போகின்ற பிரச்சினை. அதன்மீதுகூட கவனம் செலுத்தாமல் இருக்கின்றனர். குடிநீருக்கு ஒதுக்க வேண்டிய பணத்தைக் குப்பைத்தொட்டிகளுக்குச் செலவிட்டுள்ளனர்.

குப்பைத்தொட்டிகளை அவர்களே வைத்துள்ளனர். குப்பைத்தொட்டி வைப்பதற்கான கான்ட்ராக்டும் அவர்களதுதான். குடிநீர் பிரச்சினைக்காகச் செலவிட வேண்டிய பணத்தைக் குப்பைத்தொட்டிகளை வாங்கி அதிமுக அரசு வீணடித்துள்ளது. குடிநீர் பிரச்சினையைப் பற்றிப் பேசுவதற்காக சட்டமன்றத்தைக் கூட்ட வேண்டுமென்று திமுக தலைவர் ஸ்டாலின் ஒரு பொறுப்புள்ள எதிர்க்கட்சித் தலைவராக அறிக்கை வெளியிட்டுள்ளார். இதுவரையில் அதற்கு ஆளும்கட்சியினர் பதில்கூட சொல்லவில்லை. அதற்குக் காரணம், தமிழ்நாட்டில் நிலவும் குடிநீர் பிரச்சினைக்கு முழு காரணமும் அதிமுக அரசுதான்” என்று குற்றம்சாட்டினார்.


மேலும் படிக்க

டிஜிட்டல் திண்ணை: எடப்பாடியை டென்ஷன் ஆக்கிய தினகரன்- வாய்ப்பூட்டு பின்னணி!

அதிமுக: அந்த 11 பேர் குழுவில் யார் யார்?

பாக்கியராஜ் அணிக்கு விஜயகாந்த் ஆதரவு!

ரோஜாவுக்கு முக்கிய அரசு பதவி!

பாஜக அழைப்பு: அலைபாயும் ஜி.கே.வாசன்


வெள்ளி, 14 ஜுன் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon