மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வியாழன், 23 ஜன 2020

கைதி ரிலீஸ் எப்போது?

கைதி ரிலீஸ் எப்போது?

கார்த்தி நடிப்பில் அண்மையில் வெளியான தேவ் திரைப்படத்துக்கு ரசிகர்களிடையே வரவேற்பு கிடைக்கவில்லை. அதைத்தொடர்ந்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள கைதி படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார் கார்த்தி. லோகேஷ் கனகராஜ் ஏற்கெனவே இயக்கிய மாநகரம் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில், படத்தை ஜூலை 19ஆம் தேதியன்று வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

ஒரே இரவில் 4 மணி நேரம் நடைபெறும் சம்பவங்களை மட்டும் மையமாக வைத்து கைதி படம் உருவாக்கப்பட்டுள்ளது. முழுக்க முழுக்க இரவில் மட்டுமே இந்தப் படத்தின் காட்சிகள் படம்பிடிக்கப்பட்டுள்ளன. படம் முழுக்க ஆக்‌ஷன் காட்சிகள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படத்தைத் தொடர்ந்து நடிகர் விஜய்யின் அடுத்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார். இதனால் கைதி மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன.

கைதி படத்தின் பணிகளை ஏற்கெனவே முடித்துவிட்ட கார்த்தி, இயக்குநர் ஜீத்து ஜோசப் இயக்கி வரும் படத்தின் படப்பிடிப்பு பணிகளில் இணைந்துள்ளார். இந்தப் படத்தில் ஜோதிகா, சத்யராஜ், நிகிலா விமல் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இதைத்தொடர்ந்து, பொன்னியின் செல்வன் நாவலைத் தழுவி மணிரத்னம் இயக்கவுள்ள படத்திலும் கார்த்தி நடிக்கவுள்ளார்.


மேலும் படிக்க

டிஜிட்டல் திண்ணை: விரைவில் பொதுச் செயலாளர் தேர்தல்- ஓ.பன்னீர் சூசகம்

பாஜக அழைப்பு: அலைபாயும் ஜி.கே.வாசன்

சட்டமன்றக் கூட்டம்: எடப்பாடியின் அதிரடித் திட்டம்!

ஒற்றைத் தலைமை பற்றி பேசவில்லை!

வாரிசுகள் தோல்வியடைந்த வரலாறு


வியாழன், 13 ஜுன் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon