மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 15 ஆக 2020

ஆளுநர்- முதல்வர் திடீர் சந்திப்பு!

ஆளுநர்- முதல்வர் திடீர் சந்திப்பு!

பரபரப்பான அரசியல் சூழல்களுக்கிடையே ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்தித்துப் பேசியுள்ளார்.

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சில நாட்களுக்கு முன்பு டெல்லி சென்று உள் துறை அமைச்சராக புதிதாகப் பொறுப்பேற்றுள்ள அமித் ஷாவை சந்தித்து தமிழகத்தின் தற்போதைய சூழல்கள் குறித்து ஆலோசனை நடத்திய பின்பு தமிழகம் திரும்பினார்.

இந்த நிலையில் இன்று (ஜூன் 12) மாலை 5.30 மணியளவில் சென்னை கிண்டியிலுள்ள ராஜ்பவனில் ஆளுநர் பன்வாரிலாலை முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்தித்துப் பேசினார். சுமார் 45 நிமிடம் நடந்த இச்சந்திப்பில் சட்டமன்ற மானியக் கூட்டத் தொடரை கூட்டுவது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. அதுபோலவே தலைமைச் செயலாளர், டிஜிபி ஆகியோரின் பதவிக் காலம் விரைவில் முடியவுள்ள சூழலில் அதுதொடர்பாகவும் விவாதித்திருக்கிறார்கள்.

மேலும் 7 பேர் விடுதலை தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. எழுவர் விடுதலை தொடர்பாக தமிழக அமைச்சரவை நிறைவேற்றி அனுப்பிய தீர்மானம் குறித்து ஆளுநர் இதுவரை எவ்வித முடிவும் எடுக்கவில்லை. இதுதொடர்பாக் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், தீர்மானத்தில் நிலை குறித்து இரண்டு வாரங்களுக்குள் தெரிவிக்க வேண்டுமென தமிழக அரசுக்கு ஜூன் 3ஆம் தேதி உத்தரவிடப்பட்டது. இந்த சூழலில் எழுவர் விடுதலையை காலம் தாழ்த்தக் கூடாது என்று ஆளுநரிடம் முதல்வர் வலியுறுத்தியிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.


மேலும் படிக்க

பாஜக அழைப்பு: அலைபாயும் ஜி.கே.வாசன்

சட்டமன்றக் கூட்டம்: எடப்பாடியின் அதிரடித் திட்டம்!

டிஜிட்டல் திண்ணை: ஆலோசனைக் கூட்டம்! எடப்பாடி-பன்னீர் க்ளைமேக்ஸ் ஒப்பந்தம்!

ஒற்றைத் தலைமை பற்றி பேசவில்லை!

வாரிசுகள் தோல்வியடைந்த வரலாறு


புதன், 12 ஜுன் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon