மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வியாழன், 4 ஜுன் 2020

முன் ஜாமீன் கேட்கும் பா.ரஞ்சித்

முன் ஜாமீன் கேட்கும் பா.ரஞ்சித்

தஞ்சை மாவட்டம் பந்தநல்லூரில் அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இயக்குநர் பா.ரஞ்சித் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர், “ராஜராஜ சோழனின் ஆட்சிக்காலம் பொற்காலம் என்றெல்லாம் சொல்லுவார்கள். ஆனால் ராஜராஜனின் ஆட்சிக்காலம் பட்டியலின மக்களுக்கு இருண்ட காலம் என்றுதான் நான் சொல்லுவேன். ராஜராஜ சோழன் யாருடைய சாதி என்று பலரும் போட்டி போடுகின்றனர். ராஜராஜ சோழன் என்னுடைய சாதியாக இருக்க வேண்டிய அவசியம் எனக்கில்லை. அவனுடைய ஆட்சிக்காலத்தில்தான் மிகப்பெரிய சூழ்ச்சியின் அடிப்படையில் பட்டியலின மக்களின் நிலங்கள் பறிக்கப்பட்டன. சாதி ரீதியான ஒடுக்குமுறை தொடங்கியதும் அவனுடைய ஆட்சிக்காலத்தில்தான்” என்று பேசினார்.

ரஞ்சித்தின் பேச்சு சமூக ஊடகங்களில் விவாதப் பொருளாக மாறியுள்ளது. ராஜராஜ சோழனை அவதூறாக விமர்சித்த ரஞ்சித் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று இந்து மக்கள் கட்சி சார்பாக திருவிடைமருதூர் காவல்நிலையத்தில் புகாரளிக்கப்பட்டுள்ளது. மேலும், ரஞ்சித் மீது சாதி, மத, இன ரீதியிலான மக்களை பிளவுபடுத்தும் வகையிலான பேச்சு, கலவரத்தை தூண்டுதல் ஆகிய இரண்டு பிரிவுகளின் கீழ் தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாள் காவல் ஆய்வாளர் கவிதா தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்துள்ளார்.

இந்நிலையில், தனக்கு முன் ஜாமீன் வழங்கக் கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் இயக்குநர் ரஞ்சித் மனுத் தாக்கல் செய்துள்ளார். அம்மனுவில், “எனது பேச்சு எந்தத் தரப்பு மக்களிடமும் பிரிவினையை ஏற்படுத்தவில்லை. பல்வேறு வரலாற்றுப் புத்தகங்களில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களையே நானும் குறிப்பிட்டேன். எனது பேச்சு சமூக வலைதளங்களில் தவறாக சித்தரிக்கப்பட்டு வருகிறது. நில உரிமை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலேயே பேசினேன். ஆகவே எனக்கு முன் ஜாமீன் வழங்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.


மேலும் படிக்க

பாஜக அழைப்பு: அலைபாயும் ஜி.கே.வாசன்

சட்டமன்றக் கூட்டம்: எடப்பாடியின் அதிரடித் திட்டம்!

டிஜிட்டல் திண்ணை: ஆலோசனைக் கூட்டம்! எடப்பாடி-பன்னீர் க்ளைமேக்ஸ் ஒப்பந்தம்!

ஒற்றைத் தலைமை பற்றி பேசவில்லை!

வாரிசுகள் தோல்வியடைந்த வரலாறு


புதன், 12 ஜுன் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon