மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, புதன், 21 அக் 2020

வங்கிகளில் பெருகும் நிதி மோசடிகள்!

வங்கிகளில் பெருகும் நிதி மோசடிகள்!

கடந்த 11 ஆண்டுகளில் ரூ.2.05 லட்சம் கோடிக்கு மேல் வங்கிகளில் நிதி மோசடிகள் நடந்துள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

2008-09 முதல் 2018-19 வரையிலான 11 நிதியாண்டுகளில் இந்திய வங்கிகளில் மொத்தம் 53,335 நிதி மோசடிகள் நடைபெற்றுள்ளன. இதனால் ரூ.2.05 லட்சம் கோடி வரையில் மோசடி செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக ஐசிஐசிஐ வங்கியில் ரூ.5,003.81 கோடி மதிப்புக்கு 6,811 மோசடிகள் நடந்துள்ளன. இந்தியாவின் மிகப் பெரிய பொதுத் துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவில் மொத்தம் 6,793 நிதி மோசடிகள் நடந்துள்ளன. அவற்றின் மதிப்பு ரூ.23,734.74 கோடியாகும்.

ஹெச்.டி.எஃப்.சி. வங்கியில் ரூ.1,200.79 கோடி மதிப்புக்கு 2,497 மோசடிகளும், பேங்க் ஆஃப் பரோடாவில் ரூ.12,962.96 கோடி மதிப்புக்கு 2,160 மோசடிகளும், பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.28,700 கோடி மதிப்புக்கு 2,047 மோசடிகளும், ஆக்சிஸ் வங்கியில் ரூ.5,301.69 கோடி மதிப்புக்கு 1,944 மோசடிகளும், பேங்க் ஆஃப் இந்தியாவில் ரூ.12,358.2 கோடி மதிப்புக்கு 1,872 மோசடிகளும், சிண்டிகேட் வங்கியில் ரூ.5,830.85 கோடி மதிப்புக்கு 1,783 மோசடிகளும், செண்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியாவில் ரூ.9,041.98 கோடி மதிப்புக்கு 1,613 மோசடிகளும் நடைபெற்றுள்ளன.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பிடிஐ செய்தி நிறுவனம் சார்பாகக் கேட்கப்பட்ட கேள்விக்கு மத்திய ரிசர்வ் வங்கி அளித்துள்ள பதில் வாயிலாக இந்த விவரங்கள் கிடைத்துள்ளன.


மேலும் படிக்க

பாஜக அழைப்பு: அலைபாயும் ஜி.கே.வாசன்

சட்டமன்றக் கூட்டம்: எடப்பாடியின் அதிரடித் திட்டம்!

டிஜிட்டல் திண்ணை: ஆலோசனைக் கூட்டம்! எடப்பாடி-பன்னீர் க்ளைமேக்ஸ் ஒப்பந்தம்!

ஒற்றைத் தலைமை பற்றி பேசவில்லை!

வாரிசுகள் தோல்வியடைந்த வரலாறு


புதன், 12 ஜுன் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon