மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, புதன், 21 அக் 2020

சிவகார்த்தி இயக்குநருடன் சசிகுமார்

சிவகார்த்தி இயக்குநருடன் சசிகுமார்

பொன்ராம் இயக்கத்தில் உருவாகவுள்ள புதிய படத்தில் சசிகுமார் கதாநாயகனாக நடிக்கவுள்ளார்.

வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார் பொன்ராம். சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்த அப்படம் வெற்றிப்படமாக அமைந்தது. எனவே இதே கூட்டணி அடுத்ததாக ரஜினி முருகன் படத்தை இயக்க அதற்கும் ரசிகர்கள் வரவேற்பு அளித்தனர். இதனால் மூன்றாவது முறையாக சிவகார்த்திகேயனைக் கதாநாயகனாகக் கொண்டு சீமராஜா படத்தை இயக்கினார். இதனால் பொன்ராம் சிவகார்த்திகேயனின் ஆஸ்தான இயக்குநர் என அழைக்கப்பட்டார்.

தற்போது முதன்முறையாக பொன்ராம் சிவகார்த்திகேயனைத் தவிர்த்து மற்றொரு கதாநாயகனைக் கொண்டு புதிய படத்தை இயக்கவுள்ளார்.

தென் மாவட்டத்தில் உள்ள ஏதேனும் ஒரு கிராமத்தை தனது களமாகக் கொண்டு திரைப்படங்களை உருவாக்கி வருகிறார் பொன்ராம். தற்போது அவர் சசிகுமாரை கதாநாயகனாக தேர்ந்தெடுத்திருப்பதன் மூலம் மீண்டும் அந்த பாணியிலேயே ஒரு படத்தை இயக்கவுள்ளார் என்று யூகிக்கமுடிகிறது.

மேலும் இந்தப் படத்தில் பாரதிராஜா, சமுத்திரக்கனி ஆகியோரும் இணைந்துள்ளனர். சமுத்திரக்கனி ஏற்கெனவே பொன்ராம் இயக்கத்தில் ரஜினி முருகன் படத்தில் நடித்திருந்தார்.

இப்படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் பற்றிய விவரங்கள் விரைவில் வெளியாகவுள்ளன.


மேலும் படிக்க

பாஜக அழைப்பு: அலைபாயும் ஜி.கே.வாசன்

சட்டமன்றக் கூட்டம்: எடப்பாடியின் அதிரடித் திட்டம்!

டிஜிட்டல் திண்ணை: ஆலோசனைக் கூட்டம்! எடப்பாடி-பன்னீர் க்ளைமேக்ஸ் ஒப்பந்தம்!

ஒற்றைத் தலைமை பற்றி பேசவில்லை!

வாரிசுகள் தோல்வியடைந்த வரலாறு


புதன், 12 ஜுன் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon