மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, ஞாயிறு, 5 ஜூலை 2020

ஆதிக்கு ‘கிளாப்’ அடித்த இளையராஜா

ஆதிக்கு ‘கிளாப்’ அடித்த இளையராஜா

ஆதி கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பை இளையராஜா தொடங்கிவைத்துள்ளார்.

அறிமுக இயக்குநர் பிரித்வி ஆதித்யா இயக்கும் புதிய படத்தில் ஆதி கதாநாயகனாக நடிப்பதாக ஏற்கெனவே அறிவிப்பு வெளியாகியிருந்தது. ஸ்போர்ட்ஸ் டிராமா ஜானரில் உருவாகவுள்ளதாக கூறப்பட்டிருந்த நிலையில் தற்போது அந்தப் படத்திற்கு ‘கிளாப்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.

400 மீட்டர் ஓட்டப் பந்தயத்தை மையமாக கொண்டு கிளாப் திரைப்படம் உருவாகிறது. பந்தயத்தில் வெற்றி பெற ஹீரோ சந்திக்கும் சவால்களை பின்னணியாக கொண்டு திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.

ஆதிக்கு ஜோடியாக ஆகாங்ஷா சிங் நடிக்கிறார். இவரும் தடகள வீராங்கனையாக நடிக்கிறார். ஆதியின் தடகள பயணத்திற்கு ஆகாங்ஷாவின் கதாபாத்திரம் ஊக்கமளிப்பதாக அமைந்துள்ளது.

D81oWyTXsAIvGZk.jpg

தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் தயாராகும் இப்படத்தின் தெலுங்கு பதிப்பிற்கான படப்பிடிப்பை இளையராஜா தொடங்கிவைக்க, தமிழ் பதிப்பின் படப்பிடிப்பை நானி தொடங்கிவைத்துள்ளார்.

பிக் ப்ரிண்ட்ஸ் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கியுள்ள நிலையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெறவுள்ளது. தொடர்ந்து மும்பை, மதுரை ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது.


மேலும் படிக்க

பாஜக அழைப்பு: அலைபாயும் ஜி.கே.வாசன்

சட்டமன்றக் கூட்டம்: எடப்பாடியின் அதிரடித் திட்டம்!

டிஜிட்டல் திண்ணை: ஆலோசனைக் கூட்டம்! எடப்பாடி-பன்னீர் க்ளைமேக்ஸ் ஒப்பந்தம்!

ஒற்றைத் தலைமை பற்றி பேசவில்லை!

வாரிசுகள் தோல்வியடைந்த வரலாறு


புதன், 12 ஜுன் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon