மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வெள்ளி, 5 ஜுன் 2020

பிகார்: மூளைக்காய்ச்சலால் 31 குழந்தைகள் பலி!

பிகார்: மூளைக்காய்ச்சலால் 31 குழந்தைகள் பலி!

பிகார் மாநிலம் முசாபர்பூர் மாவட்டத்தில், கடந்த சில நாட்களில் மட்டும் என்சிபாலிட்டிஸ் என்கிற மூளைக்காய்ச்சல் காரணமாக 31 குழந்தைகள் இறந்துள்ளனர். இது தொடர்பாக விசாரணை மேற்கொள்ள மருத்துவக் குழுவை அனுப்பியுள்ளது மத்திய அரசு.

கெஜ்ரிவால் மற்றும் ஸ்ரீ கிருஷ்ணா மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் இந்த மரணங்கள் நிகழ்ந்துள்ளன. இது குறித்து, ஸ்ரீ கிருஷ்ணா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் கண்காணிப்பாளர் சுனில் ஷாகி கூறுகையில், “ஜனவரி மாதம் தொடங்கி ஜூன் 2ஆம் தேதி வரை 13 பேர் சிகிச்சைக்காக வந்திருந்தனர். அவர்களில் 3 பேர் இறந்துவிட்டனர். இம்மாதத் தொடக்கத்தில் 86 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அவர்களுள் 31 பேர் இறந்துள்ளனர்” என்று தெரிவித்தார்.

குழந்தைகளின் இறப்பிற்கு மூளைக்காய்ச்சல் காரணமில்லை எனவும், ஹைபோகிளைசீமியா (Hypoglycemia) என்னும் சர்க்கரை குறைபாட்டினால் ஏற்படும் பாதிப்புதான் குழந்தைகள் மரணத்துக்கு காரணம் எனவும் மற்றொரு தரப்பினர் கூறி வருகின்றனர்.

இது குறித்து பிகார் மாநிலச் சுகாதாரத் துறையின் முதன்மைச் செயலாளர் சஞ்சய் குமார் செய்தியாளர்களிடம் பதிலளித்தார். “நேற்று (ஜூன் 11) மட்டும் 29 குழந்தைகள் இறந்தனர். அவர்களது இறப்பிற்கு ஹைபோகிளைசீமியா என்னும் ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைவதுதான் காரணம் என 80 சதவிகிதம் உறுதியாகியுள்ளது” என்றார்.

இது குறித்து இந்திரா காந்தி மருத்துவ அறிவியல் நிறுவனம் நடத்திய நிகழ்ச்சியில் பங்கேற்ற பிகார் மாநில முதலமைச்சர் நிதிஷ் குமார், “குழந்தைகள் இறப்பு சம்பவம் எனக்குள் அதிக வலியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நோயினைத் தடுக்கும் நடவடிக்கையில் சுகாதாரத் துறை ஈடுபட்டு வருகிறது” எனத் தெரிவித்தார்.

“இந்த நோயானது, வெறும் வயிற்றுடன் குழந்தைகள் உறங்கச் செல்வதால் அவர்கள் ரத்தத்தில் சர்க்கரை மற்றும் குளுகோஸ் அளவு குறைவதால் ஏற்படுகிறது. இதனைத் தாங்க முடியாமல் குழந்தைகள் இறக்கின்றன. பெரும்பாலும் ஊட்டச்சத்து குறைபாடுடைய குழந்தைகளுக்கும், ஏழை எளிய குடும்பத்தில் உள்ள குழந்தைகளுக்கும் இது நேர்கிறது” என்று சுகாதாரத் துறையின் முதன்மைச் செயலாளர் சஞ்சய் குமார் தெரிவித்தார்.


மேலும் படிக்க

பாஜக அழைப்பு: அலைபாயும் ஜி.கே.வாசன்

சட்டமன்றக் கூட்டம்: எடப்பாடியின் அதிரடித் திட்டம்!

டிஜிட்டல் திண்ணை: ஆலோசனைக் கூட்டம்! எடப்பாடி-பன்னீர் க்ளைமேக்ஸ் ஒப்பந்தம்!

ஒற்றைத் தலைமை பற்றி பேசவில்லை!

வாரிசுகள் தோல்வியடைந்த வரலாறு


புதன், 12 ஜுன் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon