மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, ஞாயிறு, 5 ஜூலை 2020

நெஞ்சே எழு: குப்பம் அல்ல; பதக்கங்களின் பெட்டகம்!

நெஞ்சே எழு: குப்பம் அல்ல; பதக்கங்களின் பெட்டகம்!

நரேஷ்

மெரினாவின் மொத்த அழகையும் ரசிக்க வேண்டுமென்றால், நம் ஒவ்வொரு நாளின் அதிகாலையையும் அங்கே தொடங்கவேண்டும். உறக்கத்திலிருந்து விழிக்கும் சென்னையின் முதல் அசைவு அங்கு தான் நிகழும். கடலிலிருந்து திரும்பும் மீனவன், அந்த மீன்களை வாங்க வரும் உணவாளன், உடலை மெருகேற்ற வரும் பணக்காரன், உடல்நிலையை சீராக வைத்துக்கொள்ள முயற்சிக்கும் செலவந்தர்கள் என ஒட்டுமொத்த சமூகமும் அங்கே குழுமியிருக்கும். அப்படிப்பட்ட காலைப்பொழுதில் வழக்கத்துக்கு மாறான ஒரு காட்சியைக் கண்டு அனைவரது தலைகளும் திரும்பித் திரும்பிப் பார்த்தன.

மெரினாவின் நீச்சல் குளத்தில் விளையாடிக்கொண்டிருந்தவர்களுள் ஒரு பகுதியினர் தீவிரமாக பயிற்சி செய்வதுபோலத் தெரிந்தது. அந்த ஒரு பகுதியினர் ஒரே பகுதியைச் சேர்ந்த 15 குழந்தைகள் என்பதும் தெரியவந்தது. அவர்களை கவனிக்க ஒரு ‘கோச்’ இருந்தார். அந்த கோச் நீச்சல் குள நிர்வாகத்தால் நியமிக்கப்பட்டவர் அல்ல. அந்த குழந்தைகள் வந்த பகுதியில் இருந்து அவர்களை பாதுகாப்பாக வழிநடத்த வந்தவர் அவர். இயல்பாக இங்கே வந்து குளித்துவிட்டு செல்பவர்களைப்போல அவர்கள் வரவில்லை என்பதாலேயே அவர்களை பற்றி அறிந்துகொள்வது தேவையாகிறது. யார் அவர்கள்? எதற்காக அங்கே வந்திருக்கிறார்கள்?

ஒரு காலத்தில் மீனவ கிராமங்கள் மிகப்பெரும் செல்வத்தின் விளை நிலங்களாக இருந்தன. மன்னாதி மன்னர்களின் கிரீடத்தை அலங்கரித்த பல விலை மதிப்பற்ற முத்துக்கள், முதலில் மீனவனின் ரேகை பதிக்கப்பட்டவைகளாகவே இருந்தன. ஆனால், இன்றோ அந்த மீனவ கிராமங்களில் நீடிப்பது வறுமை மட்டுமே. அந்த வறுமை, அவர்களது வழக்கமான வாழ்வியலிலிருந்தே அவர்களை ஒதுக்கிவைத்துவிட்டன. மீன்குஞ்சுகளுக்கு நீந்தக் கற்றுக்கொடுப்பதா? என்று ஏதோ நடைபெறாத ஒன்றைச் சொல்வது போல சொலவடையை உருவாக்கினார்கள். ஆனால், இன்று அது உண்மையாகிப்போனது எத்தனைத் துயரம். ஆம், மீனவ கிராமங்களில் இருந்து கண்டெடுக்கப்பட்ட முத்துக்கள் தான் அந்த நீச்சல் குளத்தில் பயிற்சி எடுத்துக்கொண்டிருந்தன. ‘குப்பம்’ என்று நவீன சமூகம் வாடை தடவிய வாழ்விடங்களில் இருந்து தங்கள் எதிர்காலத்தைத் தேடி நீச்சல் குளத்திற்கு நீந்த வந்த வண்ண மீன்கள் அவர்கள். ஒதுக்கிவைக்கப்பட்ட ஒப்பற்ற திறனாளிகளை கண்டடையும் பயணத்தின் தொடக்கம் அதுதான். நீச்சல் மட்டுமல்லாமல், தற்காப்புக் கலை, கிரிக்கெட், கால்பந்து, சுய மேம்பாடு என்று எண்ணற்ற வாய்ப்புகளை எதிர்நோக்கிக் காத்திருந்த அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்ய வரமாக வந்திருந்தது ஒரு கரம்.

நீச்சல் பயிற்சியும் கராத்தே பயிற்சியும் முடித்துவிட்டு வந்திருந்த அந்த பிஞ்சுகளின் முகத்தில், கடல் கடந்து வந்திருப்பதைப்போன்ற ஒரு மகிழ்ச்சியைப் பார்க்க முடிந்தது. குப்பம் எனும் கடலில் இருந்து கரை கடக்க உதவுவதாய் சொல்லும் எத்தனையோ பரப்புரைகளுக்கு மத்தியில், ‘இது எங்கள் நிலம்; இங்கிருந்தே எங்களால் வெல்ல முடியும்; வாழ முடியும்; சாதிக்க முடியும்’ என்று சொல்ல வந்த முதல் தலைமுறையினருக்கு தோள் கொடுத்து உதவ முன்வந்தது ஒரு அறம் படைத்த மனம். அந்த பிஞ்சுகளின் முகத்தில் தெரிந்த ஆழமான நம்பிக்கை, அந்த மனதைத் தேடத் தூண்டியது.

வார்த்தைக்கு வார்த்தை அந்த குழந்தைகள் உச்சரித்த பெயர், நாம் ஏற்கனவே கண்டுணர்ந்த ஒன்று;

‘வருண் அறக்கட்டளை’

அரசியலைத் தாண்டிய அன்பின் வழி!

விளம்பரக் கட்டுரை


மேலும் படிக்க


பாஜக அழைப்பு: அலைபாயும் ஜி.கே.வாசன்


சட்டமன்றக் கூட்டம்: எடப்பாடியின் அதிரடித் திட்டம்!


டிஜிட்டல் திண்ணை: ஆலோசனைக் கூட்டம்! எடப்பாடி-பன்னீர் க்ளைமேக்ஸ் ஒப்பந்தம்!


உள்ளாட்சித் தேர்தல் நடக்காது: அமமுக எச்சரிக்கை


வாரிசுகள் தோல்வியடைந்த வரலாறு


புதன், 12 ஜுன் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon