மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வியாழன், 4 ஜுன் 2020

அதிதீவிரப் புயலாக மாறிய வாயு!

அதிதீவிரப் புயலாக மாறிய வாயு!

அரபிக்கடலில் உருவான வாயு அதிதீவிரப் புயலாக மாறியுள்ளது. நாளை இது குஜராத்தில் கரையைக் கடக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த வாரம் தென்கிழக்கு அரபிக்கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியானது வலுப்பெற்று புயலாக மாறியது. இதற்கு வாயு என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயல் வடக்கு வடமேற்குத் திசையில் நகர்த்து, தற்போது அதிதீவிரப் புயலாக மாறியுள்ளது. நாளை (ஜூன் 13) காலையில் இந்த புயல் குஜராத்தின் சவுராஷ்டிரா, கட்ச் பகுதிகளுக்கு இடையே கரையைக் கடக்கும் என்று தெரிவித்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம்.

வரும் ஜூன் 13, 14 ஆகிய தேதிகளில் அப்பகுதிகளில் பெருமழை இருக்கும் எனவும், மணிக்கு 110 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் எனவும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனை எதிர்கொள்ளும் வகையில் இந்திய விமானப்படையைச் சேர்ந்த ஹெலிகாப்டர்கள் உட்படப் பல உபகரணங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இந்த புயலை முன்னிட்டு மகாராஷ்டிர மாநிலத்தில் படகுப் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. மீனவர்கள் விரைவில் கரைக்குத் திரும்ப வேண்டுமென்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


மேலும் படிக்க


பாஜக அழைப்பு: அலைபாயும் ஜி.கே.வாசன்


சட்டமன்றக் கூட்டம்: எடப்பாடியின் அதிரடித் திட்டம்!


டிஜிட்டல் திண்ணை: ஆலோசனைக் கூட்டம்! எடப்பாடி-பன்னீர் க்ளைமேக்ஸ் ஒப்பந்தம்!


உள்ளாட்சித் தேர்தல் நடக்காது: அமமுக எச்சரிக்கை


வாரிசுகள் தோல்வியடைந்த வரலாறு


புதன், 12 ஜுன் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon