மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வியாழன், 4 ஜுன் 2020

சென்னை: சைக்கோ கொலையாளி கைது!

சென்னை: சைக்கோ கொலையாளி கைது!

மே 26ஆம் தேதியன்று சென்னை ரெட்டேரி மேம்பாலத்திற்கு அடியில் படுத்திருந்த அசதுல்லா என்பவரின் பிறப்புறுப்பை மர்ம நபர் ஒருவர் கடித்து துண்டித்துவிட்டு தப்பியோடியதாக குற்றம்சாட்டப்பட்டது. படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அசதுல்லா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதே வகையில் ஜூன் மாதம் கூடங்குளத்தை சேர்ந்த நாராயணபெருமாள் என்பவரும் மர்ம நபரால் தாக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்த இரு சம்பவங்களுக்கும் தொடர்பு இருக்கலாம் என்று சந்தேகித்த போலீசார் அப்பகுதிகளில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், மர்ம நபர் ஒருவர் நடமாடும் காட்சியை கண்டறிந்தனர். வீடியோ பதிவில் லுங்கி அணிந்தபடி நடமாடும் நபர் குறித்து தகவல் அறிந்தவர்கள் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கோ, மாதவரம் காவல் ஆய்வாளர் ஜவஹருக்கோ தகவல் தெரிவிக்கும்படி காவல்துறை தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது.

போலீசாரும் அந்நபரை கண்டுபிடிக்க தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இந்நிலையில், சிசிடிவியில் சிக்கிய மர்ம நபரை வில்லிவாக்கத்தில் போலீசார் கைது செய்துள்ளனர். அவரிடம் விசாரணை நடத்தியதில் அவர் பெயர் முனுசாமி (வயது 35) எனவும், அவர் மானாமதுரையை சேர்ந்தவர் எனவும் தெரியவந்துள்ளது.


மேலும் படிக்க


பாஜக அழைப்பு: அலைபாயும் ஜி.கே.வாசன்


சட்டமன்றக் கூட்டம்: எடப்பாடியின் அதிரடித் திட்டம்!


டிஜிட்டல் திண்ணை: ஆலோசனைக் கூட்டம்! எடப்பாடி-பன்னீர் க்ளைமேக்ஸ் ஒப்பந்தம்!


உள்ளாட்சித் தேர்தல் நடக்காது: அமமுக எச்சரிக்கை


வாரிசுகள் தோல்வியடைந்த வரலாறு


புதன், 12 ஜுன் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon