மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, ஞாயிறு, 5 ஜூலை 2020

மோடிக்கு முஸ்லிம் தலைவர்கள் கடிதம்!

மோடிக்கு முஸ்லிம் தலைவர்கள் கடிதம்!

புதிய அரசு முஸ்லிம்கள் உள்ளிட்ட அனைவரின் நம்பிக்கையையும் பெற வேண்டும் என்று பாஜகவின் தேர்தல் வெற்றிக்குப் பின் இரண்டாவது முறையாக பிரதமர் பொறுப்பேற்பதற்கு முன் மோடி பேசினார்.

இந்த நிலையில் முஸ்லிம் சமூகத்தின் முக்கிய தலைவர்கள் கையெழுத்திட்டு பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர். அந்தக் கடிதத்தில், முஸ்லிம் சமுதாயத்தின் கல்வி, வேலைவாய்ப்பு ஆகிய அம்சங்களில் கவனம் செலுத்தி நம்பிக்கை எழுப்பும் நடவடிக்கைகளை அதிகப்படுத்துமாறு கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

ஜமாத் உலமா இ ஹிந்த் அமைப்பின் தலைவர் மௌலனா மஹ்மூத் மதானி, டெல்லி சிறுபான்மை ஆணையத்தின் முன்னாள் தலைவர் கமால் ஃபரூக்கி, ஹைதரபாத்தில் கல்வி நிறுவன தலைவரான டாக்டர் ஃபக்ருதீன் முகமது, முன்னாள் வருமான வரித்துறை ஆணையர் குயாசிர் ஷாமின் உள்ளிட்ட சுமார் இருபது தலைவர்கள் மோடிக்கு கடிதம் அனுப்பியிருக்கிறார்கள்.

அந்தக் கடிதத்தில், “முஸ்லிம் சமுதாயத்தின் முக்கியப் பிரச்சினைகளின் மீது மத்திய அரசு கவனம் செலுத்திட வேண்டும். மோடி கூறியபடி முஸ்லிம் சமுதாயத்தின் நம்பிக்கையைப் பெறுவதற்கு அந்த சமூகத்திடன் மத்திய அரசு உரையாடல்களை அதிகப்படுத்த வேண்டும். அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி என்பதில் இந்த நாட்டின் குடிமகன்களான முஸ்லிம்களும் இடம்பெற வேண்டும்” என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.


மேலும் படிக்க


பாஜக அழைப்பு: அலைபாயும் ஜி.கே.வாசன்


சட்டமன்றக் கூட்டம்: எடப்பாடியின் அதிரடித் திட்டம்!


டிஜிட்டல் திண்ணை: ஆலோசனைக் கூட்டம்! எடப்பாடி-பன்னீர் க்ளைமேக்ஸ் ஒப்பந்தம்!


உள்ளாட்சித் தேர்தல் நடக்காது: அமமுக எச்சரிக்கை


வாரிசுகள் தோல்வியடைந்த வரலாறு


புதன், 12 ஜுன் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon