மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, ஞாயிறு, 5 ஜூலை 2020

ஆலை வாகனம் விபத்து: 2 பெண்கள் பலி!

ஆலை வாகனம் விபத்து: 2 பெண்கள் பலி!

ஆம்பூர் அருகே தோல் தொழிற்சாலை வாகனமொன்று விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 2 பெண் பணியாளர்கள் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

வேலூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்த துத்திப்பட்டு எனுமிடத்தில் என்எம்இசட் என்ற தனியார் காலணித் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இன்று (ஜூன் 12) காலையில் இந்த ஆலையைச் சேர்ந்த பணியாளர் வாகனமொன்று ஆம்பூர் அருகிலுள்ள வீரங்குப்பம், மெல்குப்பம், வடகரை, வடசேரி பகுதிகளைச் சேர்ந்த சுமார் 25க்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்களை ஏற்றி கொண்டு சென்றது. மணியாரகுப்பம் கூட்ரோடு அருகே சென்றபோது, சாலையில் ஒரு பெண் குறுக்கே சென்றதாகக் கூறப்படுகிறது. சாலையோரம் காத்திருந்த தொழிலாளர்கள் மீது மோதாமல் இருப்பதற்காக திடீரென்று வாகனத்தை பிரேக் போட்டு நிறுத்தியுள்ளார் ஓட்டுநர். அப்போது, வேகம் காரணமாகக் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் வடகரையைச் சேர்ந்த சிவகாமி, வடசேரியைச் சேர்ந்த உஷா ஆகிய இரண்டு பெண் தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே பலியாகினர். வாகனத்தில் இருந்த 20க்கும் மேற்பட்ட பெண்கள் படுகாயம் அடைந்தனர். அக்கம்பக்கத்தினர் இது பற்றி உமராபாத் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். படுகாயம் அடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு, ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்த விபத்து குறித்து உமராபாத் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆம்பூர் துணைக் காவல் கண்காணிப்பாளர் சச்சிதானந்தன் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டார். ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் வில்வநாதன், விபத்தில் காயமடைந்த பெண் தொழிலாளர்களை மருத்துவமனையில் சந்தித்து ஆறுதல் கூறினார்.


மேலும் படிக்க


பாஜக அழைப்பு: அலைபாயும் ஜி.கே.வாசன்


சட்டமன்றக் கூட்டம்: எடப்பாடியின் அதிரடித் திட்டம்!


டிஜிட்டல் திண்ணை: ஆலோசனைக் கூட்டம்! எடப்பாடி-பன்னீர் க்ளைமேக்ஸ் ஒப்பந்தம்!


உள்ளாட்சித் தேர்தல் நடக்காது: அமமுக எச்சரிக்கை


வாரிசுகள் தோல்வியடைந்த வரலாறு


புதன், 12 ஜுன் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon