மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 5 ஜூலை 2020

புதையலைத் தேடும் பயணம்!

புதையலைத் தேடும் பயணம்!

புதையலைத் தேடும் பயணத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகிறது பன்றிக்கு நன்றி சொல்லி திரைப்படம்.

பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த சிலை ஒன்றை ஒரு பெரிய கூட்டமே தேடுகிறது. விலை மதிப்பற்ற அந்த சிலை பற்றிய முக்கிய தகவல் ஒன்று கதாநாயகனுக்கு கிடைக்கிறது. சிலையைக் கைப்பற்ற நடக்கும் சேஸிங்கை அவல நகைச்சுவை பாணியில் விவரிக்கிறது பன்றிக்கு நன்றி சொல்லி திரைப்படம். பாலா அருண் இயக்குநராக அறிமுகமாகும் இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.

நிஷாந்த், விஜய் சத்யா, செல்லா, பாலாஜி, சந்திரகுமார், வியன், பாஸ்கர் என அறிமுக நடிகர்கள் பலர் இணைந்து நடிக்கின்றனர். விக்னேஷ் செல்வராஜ் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு ராம் - சதீஷ் படத்தொகுப்பாளராக பணியாற்றுகின்றனர். சுரேன் விகாஷ் இசையமைக்கிறார்.

அவல நகைச்சுவை பாணியில் தயாராகும் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து நல்ல வரவேற்புள்ள நிலையில் இப்படம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹட் மீடியா ஒர்க்ஸ் தயாரிக்கும் இப்படத்தை ஓம் பிலிம்ஸ், ஸ்ரீ பிலிம்ஸ் நிறுவனங்கள் இணைந்து வெளியிடுகின்றன.


மேலும் படிக்க


பாஜக அழைப்பு: அலைபாயும் ஜி.கே.வாசன்


சட்டமன்றக் கூட்டம்: எடப்பாடியின் அதிரடித் திட்டம்!


டிஜிட்டல் திண்ணை: ஆலோசனைக் கூட்டம்! எடப்பாடி-பன்னீர் க்ளைமேக்ஸ் ஒப்பந்தம்!


உள்ளாட்சித் தேர்தல் நடக்காது: அமமுக எச்சரிக்கை


வாரிசுகள் தோல்வியடைந்த வரலாறு


புதன், 12 ஜுன் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon