மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, ஞாயிறு, 5 ஜூலை 2020

கோயம்புத்தூரில் 7 இடங்களில் என்ஐஏ சோதனை!

கோயம்புத்தூரில் 7 இடங்களில் என்ஐஏ சோதனை!

இலங்கையில் நடந்த தொடர் குண்டு வெடிப்பிற்குக் காரணமான குற்றவாளிகளுடன் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், கோயம்புத்தூரில் 7 இடங்களில் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகிறது தேசியப் புலனாய்வு முகமை.

கடந்த ஏப்ரல் 21ஆம் தேதி ஈஸ்டர் பண்டிகையின் போது இலங்கையில் உள்ள தேவாலயங்கள், நட்சத்திர விடுதிகளில் தற்கொலைப்படையால் தொடர் குண்டு வெடிப்புகள் நடந்தன. இந்த தாக்குதலில், 250க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 500க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். தமிழகத்தில் உள்ள சிலர், இந்த குண்டு வெடிப்புகளுக்கு ஆதரவாகச் சமூக வலைதளங்களில் கருத்துகள் வெளியிட்டனர்.

இந்த குண்டு வெடிப்பிற்குக் காரணமான குற்றவாளிகளுடன் சம்பந்தம் இருக்கலாம் எனச் சந்தேகித்து, இன்று (ஜூன் 12) அதிகாலை 6 மணியளவில் கோயம்புத்தூரில் 7 இடங்களில் சோதனை நடத்தினர் தேசியப் புலனாய்வு முகமை அதிகாரிகள். இவர்களுடன் கோயம்புத்தூர் காவல் துறையினரும் சோதனையில் ஈடுபட்டனர். உக்கடத்தில் அசாருதீன், போத்தனூரில் சதாம், அக்ரம், குனியமுத்தூரில் அபுபக்கர் ஆகியோரது வீடுகளிலும், அக்பர், இதியதுல்லாஹ் மற்றும் ஷகிம்ஷா உள்ளிட்ட 7 பேரின் வீடுகளிலும் சோதனை நடத்தி வருகின்றனர். இவர்களது தொலைபேசி, கணினி போன்ற மின்னணு உபகரணங்களைத் தேசியப் புலனாய்வு முகமை ஆய்வு செய்து வருகிறது. இந்த சோதனையைத் தமிழகத்தைச் சேர்ந்த 7 துணைக் காவல் கண்காணிப்பாளர்கள் கண்காணித்து வருகின்றனர்.

இந்த சோதனை குறித்துப் பேசிய தேசியப் புலனாய்வு முகமை அதிகாரிகள், “இந்த 7 பேரும் தடை செய்யப்பட்ட தேசிய தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் ஃபேஸ்புக் பக்கத்தில் தொடர்பு கொண்டுள்ளனர்” எனத் தெரிவித்துள்ளனர்.


மேலும் படிக்க


பாஜக அழைப்பு: அலைபாயும் ஜி.கே.வாசன்


சட்டமன்றக் கூட்டம்: எடப்பாடியின் அதிரடித் திட்டம்!


டிஜிட்டல் திண்ணை: ஆலோசனைக் கூட்டம்! எடப்பாடி-பன்னீர் க்ளைமேக்ஸ் ஒப்பந்தம்!


உள்ளாட்சித் தேர்தல் நடக்காது: அமமுக எச்சரிக்கை


வாரிசுகள் தோல்வியடைந்த வரலாறு


புதன், 12 ஜுன் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon