மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 12 ஜுன் 2019

பாஜக அழைப்பு: அலைபாயும் ஜி.கே.வாசன்

பாஜக அழைப்பு: அலைபாயும் ஜி.கே.வாசன்

சில நாட்களாகவே தமிழக அரசியல் அரங்கில் விவாதிக்கப்படும் முக்கியமான விஷயங்களில் ஒன்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி பாரதிய ஜனதா கட்சியோடு இணையப் போகிறது என்பதும், பாஜகவின் மாநில தலைவராக தமாகா தலைவர் ஜி.கே. வாசன் நியமிக்கப்படப் போகிறார் என்பதும்தான்.

இந்த செய்தி சமூக வலைதளங்களிலும் அரசியல் வட்டாரங்களிலும் விவாதிக்கப்பட்டது முதலே தமிழ் மாநில காங்கிரஸ் தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டு வந்தது. ஒரு கட்டத்தில் தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ். அழகிரி இது பற்றி குறிப்பிட்டு, தமிழ் மாநில காங்கிரஸ் தொண்டர்கள் காங்கிரஸ் கட்சிக்கு வரவேண்டும் அறிக்கை கொடுத்தார். இதற்கு தமிழ் மாநில காங்கிரஸ் தரப்பில் வாசனே மறுப்பு தெரிவித்தார்.

ஆனாலும் டெல்லியில் பாஜக தலைமையில் வாசனைக் குறிவைத்து தொடர்ந்து முயற்சித்து வருகிறது. இந்த ஜூன் மாதத்தில் மட்டும் இதுவரை ஜி.கே.வாசன் மூன்று முறை டெல்லி சென்றுள்ளார். அவர் தமிழக காங்கிரஸ் பொறுப்பாளரான பியூஷ் கோயலிடம் தொடர்ச்சியாக பேசி வருகிறார் என்றெல்லாம் தமாகா வட்டாரங்களிலிருந்தே தகவல்கள் கசிகின்றன.

இதுபற்றி வாசனுக்கு நெருக்கமான சில தமாகா பிரமுகர்களிடம் பேசினோம்.

“கடந்த மக்களவைத் தேர்தலில் முதலில் திமுக கூட்டணியில்தான் இடம்பெற வாசன் விரும்பினார். ஆனால் ஒருபோதும் கூட்டணிக்குள் தமாகாவை அனுமதிக்கக் கூடாது என தமிழக காங்கிரஸின் அனைத்து தலைவர்களும் டெல்லியில் சொல்லி அதன் மூலம் இந்த முயற்சி தடுத்து நிறுத்தப்பட்டது.

அதன் பின் அமைதியாக இருந்த வாசன் வேறு வழியின்றிதான் பாஜக இடம் பெற்றுள்ள அதிமுக கூட்டணியில் இடம் பிடித்தார். ஒரு தொகுதியில் போட்டியிட்டார். அதுவும் தமாகாவின் சின்னமான சைக்கிள் சின்னம் இல்லாமல் ஆட்டோ சின்னத்தில் போட்டியிட வேண்டிய சூழல் ஏற்பட்டது. எல்லாமே, கட்சி தேர்தல் களத்தில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டு விடக்கூடாது என்பதற்காகத்தான்.

இந்நிலையில் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு பாஜக தரப்பில் இருந்து வாசனுக்கு சில நிபந்தனையோடு கூடிய வேண்டுகோள் வைக்கப்பட்டது. அதில் முக்கியமானது ராஜ்யசபா எம்பி ஆக்குகிறோம், தமாகாவை பாஜகவோடு இணைத்து தமிழக பாஜக தலைவராக வாசன் இருக்க வேண்டும் என்பது.

மூப்பனாருக்கு மிக நெருங்கிய நண்பரான பிரணாப் முகர்ஜி, ஜிகே வாசனை பற்றி மோடியிடம் நல்ல விஷயங்கள் பலவற்றை எடுத்துச் சொல்லியிருக்கிறார் குறிப்பாக மத்திய அமைச்சராக இருந்த காங்கிரஸ் அமைச்சர்களில் குற்றச்சாட்டுக்கள் எதுவும் இல்லாதவர். தமிழக அரசியல் களத்துக்கு ஏற்ற பொதுவான பிம்பமாக கருதப்படக்கூடியர், அதிர்ந்து பேசாதவர் மாநில, மாவட்ட நிர்வாகிகள் கொண்ட ஒரு கட்சியை தொடர்ந்து நடத்தி வருபவர். தமிழ்நாட்டு அரசியலில் பாஜகவுக்கு ஏற்ற சர்ச்சையில்லாத ஒரு தலைவராக ஜி.கே.வாசன் இருப்பார் என்ற ரிப்போர்ட்டின் அடிப்படையில்தான் வாசனை பாஜக தலைமை தொடர்ந்து அணுகி வருகிறது.

மேலும் தமிழ்நாட்டில் தேசிய பாரம்பரியம் கொண்ட ஒருவர் பாஜக தலைவராக வேண்டும் என்றும், அது காங்கிரஸ் காரராக இருந்தாலும் பரவாயில்லை என்றும் பாஜக கருதுகிறது. ஆந்திராவில் கூட காங்கிரசில் இருந்து வந்தவரையே பாஜக மாநிலத் தலைவராக்கியிருக்கிறார்கள்.

ஆனாலும் ஏதோ ஒன்று தலைவரை தடுத்து வருகிறது. என்ன செய்யலாம் என்று தீவிரமாக யோசித்து வருகிறார். வரும் 16 ஆம் தேதி சென்னையில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் முக்கியமான ஆலோசனைக் கூட்டம் நடைபெற இருக்கிறது. இந்தக் கூட்டத்தில் இதுபற்றி நிச்சயம் பேசப்படலாம்” என்கிறார்கள்.


மேலும் படிக்க


டிஜிட்டல் திண்ணை: ஆலோசனைக் கூட்டம்! எடப்பாடி-பன்னீர் க்ளைமேக்ஸ் ஒப்பந்தம்!

உள்ளாட்சித் தேர்தல் நடக்காது: அமமுக எச்சரிக்கை


அதிமுகவில் இணைந்த முன்னாள் அமைச்சர்!


கலெக்டர் ரோகிணியை எகிறிய எடப்பாடிசெக்ஸுக்கு பிறகு சக்தியாய் உணரும் இந்தியப் பெண்கள்!


ராஜேஷ் தாஸ் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு: வெளியான அதிர்ச்சித் தகவல்! ...

6 நிமிட வாசிப்பு

ராஜேஷ் தாஸ் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு: வெளியான அதிர்ச்சித் தகவல்!

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - சங்கரா மீனும் கெட்டியான குழம்பும்! ...

3 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - சங்கரா மீனும் கெட்டியான குழம்பும்!

'மன்னிப்பு கேட்க வேண்டும்': தலைமை நீதிபதிக்கு எதிராக வலுக்கும் ...

6 நிமிட வாசிப்பு

'மன்னிப்பு கேட்க வேண்டும்': தலைமை நீதிபதிக்கு எதிராக வலுக்கும் குரல்கள்!

புதன் 12 ஜுன் 2019