மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வியாழன், 4 ஜுன் 2020

கருக்கலைப்பு: தர்ப்பூசணிப் பட்டையில் வைத்து மறைப்பு!

கருக்கலைப்பு: தர்ப்பூசணிப் பட்டையில் வைத்து மறைப்பு!

நொய்டா அருகே ஐந்து மாத பெண் குழந்தையின் கரு, தர்ப்பூசணிப் பழத்தின் பட்டையில் வைத்து மறைத்து சாக்கடையில் வீசப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கடந்த 10ஆம் தேதியன்று, உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டா அருகேயுள்ள கெஜ்ஹா கிராமத்தில் ரவீந்திரா என்பவர் துப்புரவுப் பணியில் ஈடுபட்டுவந்தார். செக்டார் 93 அருகே வேலை செய்தபோது, தர்ப்பூசணிப் பழத்தின் பட்டையில் ஐந்து மாத பெண் குழந்தையின் கரு மறைக்கப்பட்டுக் கிடந்ததைக் கண்டார். இதுபற்றி போலீசாரிடம் புகார் அளித்தார். காலை 11 மணியளவில் ஒரு வீட்டுக்கு வெளியே துப்புரவுப் பணியில் ஈடுபட்டபோது, அதை அவர் கண்டெடுத்தார் என்று தெரிவித்துள்ளார் போலீஸ் அதிகாரி பர்மூத் அலி பந்திர்.

இது தொடர்பாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தியத் தண்டனைச் சட்டம் பிரிவு 318இன் கீழ் அடையாளம் தெரியாத நபர்கள் மீது இதில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. தற்போது அந்தக் கரு, மருத்துவப் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

2011ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி, உத்தரப் பிரதேச மாநிலத்தில் 1,000 ஆண்களுக்கு 902 பேர் என்ற அளவிலேயே பெண்கள் எண்ணிக்கை உள்ளது. கருக்கலைப்பு சட்ட விரோதமானது என்றாலும், குறிப்பிட்ட சூழலில் 20 வாரங்கள் ஆன கருவைக் கலைக்கலாம் என்று 1971ஆம் ஆண்டு மருத்துவக் கருக்கலைப்பு சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனாலும், சட்டத்துக்குப் புறம்பாகக் கருக்கலைப்பு தொடர்ந்து நடைபெற்றுவருகிறது.


மேலும் படிக்க


டிஜிட்டல் திண்ணை: ஆலோசனைக் கூட்டம்! எடப்பாடி-பன்னீர் க்ளைமேக்ஸ் ஒப்பந்தம்!

உள்ளாட்சித் தேர்தல் நடக்காது: அமமுக எச்சரிக்கை


அதிமுகவில் இணைந்த முன்னாள் அமைச்சர்!


கலெக்டர் ரோகிணியை எகிறிய எடப்பாடிசெக்ஸுக்கு பிறகு சக்தியாய் உணரும் இந்தியப் பெண்கள்!


புதன், 12 ஜுன் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon