மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 29 மே 2020

புதிய மக்களவையின் இடைக்கால சபாநாயகர்!

புதிய மக்களவையின் இடைக்கால சபாநாயகர்!

மக்களவையின் இடைக்கால சபாநாயகராகப் பாரதிய ஜனதா கட்சி எம்.பி. வீரேந்திர குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

17ஆவது மக்களவையைத் தேர்ந்தெடுப்பதற்கான பொதுத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி 300 தொகுதிகளுக்கு மேல் வெற்றிபெற்றுத் தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சியமைத்துள்ளது. நரேந்திர மோடி மே 30ஆம் தேதி பிரதமராகப் பொறுப்பேற்றிருந்தார். புதிய மக்களவையின் முதல் கூட்டத் தொடர் வருகிற ஜூன் 17ஆம் தேதி தொடங்குகிறது. இக்கூட்டத்தில் புதிய எம்.பி.க்கள் பதவிப் பிரமாணம் செய்யப்படவுள்ளனர். அதைத் தொடர்ந்து மக்களவைக்கான புதிய சபாநாயகர் 19ஆம் தேதி தேர்வு செய்யப்படுகிறார். அதற்கு முன்பாக, இடைக்கால சபாநாயகராக பாஜக எம்.பி. வீரேந்திர குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

65 வயதான வீரேந்திர குமார் மத்தியப் பிரதேச மாநிலத்தின் திகம்ஹர் மக்களவைத் தொகுதியிலிருந்து எம்.பி.யாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். பாஜக சார்பில் இவர் ஏழு முறை எம்.பி.யாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். சென்ற முறை மோடி அரசின் மத்திய அமைச்சராக இவர் செயல்பட்டுள்ளார். ஜூன் 17ஆம் தேதி தொடங்கும் மக்களவைக் கூட்டத் தொடரில் மக்களவை உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 542 பேருக்கும் வீரேந்திர குமார் பதவிப் பிரமாணம் செய்துவைப்பார்.

இடைக்கால சபாநாயகராக மேனகா காந்தி நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வீரேந்திர குமார் தற்போது நியமிக்கப்பட்டுள்ளார். ஜூன் 19ஆம் தேதி புதிய சபாநாயகராக மேனகா காந்தி நியமிக்கப்படவும் வாய்ப்புள்ளது.


மேலும் படிக்க


டிஜிட்டல் திண்ணை: ஆலோசனைக் கூட்டம்! எடப்பாடி-பன்னீர் க்ளைமேக்ஸ் ஒப்பந்தம்!

உள்ளாட்சித் தேர்தல் நடக்காது: அமமுக எச்சரிக்கை


அதிமுகவில் இணைந்த முன்னாள் அமைச்சர்!


கலெக்டர் ரோகிணியை எகிறிய எடப்பாடிசெக்ஸுக்கு பிறகு சக்தியாய் உணரும் இந்தியப் பெண்கள்!


புதன், 12 ஜுன் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon