மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 4 ஜுன் 2020

கிச்சன் கீர்த்தனா: அவல் பணியாரம்

கிச்சன் கீர்த்தனா: அவல் பணியாரம்

சுறுசுறுப்பைத் தரும் பணியாரம்

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் 1568ஆம் ஆண்டைச் சேர்ந்த கல்வெட்டு ஒன்றில் ‘புளியாதரை’ என்கிற புளியோதரை, பணியாரம், பருப்புப் பொங்கல், அப்பம், தோசை ஆகிய பலகாரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. அந்தப் பலகாரங்கள் செய்யத் தேவையான பொருள்களையும் அக்கல்வெட்டு கூறுகிறது. திருவரங்கம் கோயில் வரலாற்றைச் சொல்லும் கோயிலொழுகில் `நித்யம் ஏழுருப்படி பணியாரம்’ எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அவல் பணியாரம் குறித்து அதில் குறிப்பிடப்படவில்லை என்றாலும், இது அனைவராலும் விருப்பப்படுவது.

என்ன தேவை?

அவல் - 100 கிராம்

தேங்காய் - ஒரு மூடி

அரிசி மாவு - 300 கிராம்

பெரிய வெங்காயம் – 2

கொத்தமல்லித் தழை - ஒரு கைப்பிடி

கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி

பச்சை மிளகாய் – 10

கடலைப் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்

புளித்த தயிர் - 200 கிராம்

எண்ணெய், உப்பு - தேவையான அளவு

எப்படிச் செய்வது?

அவலை மிக்ஸியில் சேர்த்து ரவை பதத்துக்கு தூளாக்கி அரிசி மாவுடன் சேர்த்து, புளித்த தயிரில் 8 மணி நேரம் ஊறவைக்கவும். அதனுடன் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், பல்லு பல்லாக நறுக்கிய தேங்காய், பொடியாக நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை ஆகியவற்றை கலந்துகொள்ளவும். பிறகு, கடலைப் பருப்பைத் தண்ணீரில் ஊறவைத்து கொரகொரப்பாக அரைத்து மாவுடன் கலந்து உப்பு சேர்த்து ஒன்றாகக் கலக்க வேண்டும். அதன்பிறகு மாவில் தேவையான அளவு தண்ணீர்விட்டு தோசை மாவு பக்குவத்தில் தயாரிக்கவும். பணியாரச்சட்டியில் எண்ணெய் தடவி, மாவை ஊற்றி சுட்டு எடுத்தால், அவல் பணியாரம் ரெடி.

என்ன பலன்?

அவல் உடல் சூட்டைத் தணித்து நல்ல புத்துணர்ச்சியைத் தரும். அவல் உணவுகளைச் சாப்பிடுவதன் மூலம் அந்த நாள் முழுமையும் சுறுசுறுப்புடன் இருக்க செய்யும். குழந்தைகளின் வளர்ச்சிக்கும், உடல் ஆரோக்கியத்துக்கும் உதவும்.

நேற்றைய ரெசிப்பி: வாழைப்பழக் குழிப்பணியாரம்


மேலும் படிக்க


டிஜிட்டல் திண்ணை: ஆலோசனைக் கூட்டம்! எடப்பாடி-பன்னீர் க்ளைமேக்ஸ் ஒப்பந்தம்!

உள்ளாட்சித் தேர்தல் நடக்காது: அமமுக எச்சரிக்கை


அதிமுகவில் இணைந்த முன்னாள் அமைச்சர்!


கலெக்டர் ரோகிணியை எகிறிய எடப்பாடிசெக்ஸுக்கு பிறகு சக்தியாய் உணரும் இந்தியப் பெண்கள்!


புதன், 12 ஜுன் 2019

chevronLeft iconமுந்தையது