மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 11 ஜுன் 2019

டிஜிட்டல் திண்ணை: ஆலோசனைக் கூட்டம்! எடப்பாடி-பன்னீர் க்ளைமேக்ஸ் ஒப்பந்தம்!

டிஜிட்டல் திண்ணை:  ஆலோசனைக் கூட்டம்!   எடப்பாடி-பன்னீர் க்ளைமேக்ஸ் ஒப்பந்தம்!

அலுவலக வைஃபை பாஸ்வேர்டை உள்ளிட்டதும், டேட்டா ஆன் ஆனது. வாட்ஸ் அப், ‘கொஞ்சம் காத்திருக்கவும்’ என்று செய்தி அனுப்பியது. சில நிமிடங்களில் நீண்ட செய்தி வந்தது.

“அதிமுகவுக்கு நாளை முக்கியமான நாள். மதுரை சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா, அதிமுகவுக்கு ஒற்றைத் தலைமைதான் வேண்டும் என்று உடைத்துப் பேசிப் போர்க்குரல் எழுப்பிய பிறகு அதிமுகவின் தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், செய்தித் தொடர்பாளர்கள் ஆகியோர் கலந்துகொள்ளும் முக்கியமான ஆலோசனைக் கூட்டம் நாளை (ஜூன் 12) சென்னை அதிமுக தலைமைக் கழகத்தில் நடக்க இருக்கிறது.

இதற்காக இன்றே பல்வேறு மாவட்டச் செயலாளர்களும் சென்னைக்கு வந்துவிட்டார்கள். இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ள வருபவர்கள் கண்டிப்பாக செல்போன் எடுத்துவரக் கூடாது என்று தனித்தனியாக அனைவருக்கும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. . இந்தக் கூட்டத்தில் ஒற்றைத் தலைமைப் பற்றி பேச வேண்டும் என்று குறிப்பிட்ட சில மாசெ.க்கள் உறுதியாக இருக்கிறார்கள். தேர்தல் தோல்விக்கான காரணமே வலிமையான ஒற்றைத் தலைமை இல்லாததுதான் என்ற கருத்தில் பலர் இருக்கிறார்கள். அவர்கள் நிச்சயமாக இதுபற்றித்தான் பேசக் காத்திருக்கிறார்கள்.

இன்னும் சிலரோ ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவரும் வேண்டாம் என்ற நிலைப்பாட்டில் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவரான கே.சி. பழனிசாமி நாளை நடக்க இருக்கும் கூட்டத்தில் கலந்துகொள்ள கடுமையாக முயற்சித்து வருகிறார். பொதுச் செயலாளர் தேர்தல் நடத்தக் கோரி தொடர்ந்து வலியுறுத்தி வரும் கே.சி. பழனிசாமி, சமீபத்தில் தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்துவிட்டு வந்து அதிமுகவில் தான் சேர்ந்துவிட்டதாக அறிவித்தார். ஆனால் இன்றுவரை அவர் முறைப்படி அதிமுகவில் இணைந்ததற்கான தகவல் இல்லை. கே.சி.பழனிசாமி கூட்டத்துக்கு வந்தால் தங்கள் இருவருக்கு எதிராகவும் பேசுவார் என்பதால் அவரை அனுமதிக்கக் கூடாது என்பதில் ஈபிஎஸ், ஓபிஎஸ் ஆகிய இருவருமே தெளிவாக இருக்கிறார்கள்.

உள்ளபடியே நாளை நடக்க இருக்கும் கூட்டத்தில் அதிக ஆதரவு எடப்பாடி பழனிசாமிக்கு இருக்கிறதா, ஓ.பன்னீருக்கு இருக்கிறதா என்றால் எடப்பாடிக்குதான் என்கிறார்கள் தலைமைக் கழக நிர்வாகிகள். ஓபிஎஸ் சின் உறுதியான ஆதரவாளராக இருந்த கே.பி.முனுசாமி கூட நாளை ஓ.பன்னீரின் ஒற்றைத் தலைமையை வற்புறுத்தி பேசுவாரா என்பதே கேள்விக்குறிதான் என்கிறார்கள். ஓ.பன்னீருக்காக நேற்று வரை பேசிவந்த அமைச்சர் உதயகுமார் இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘காமராஜருக்கு அடுத்து சாதாரண மக்களின் முதல்வராக இருப்பவர் எடப்பாடிதான்’ என்கிறார். இதைக் கேட்ட பன்னீருக்கே இன்று ஷாக் ஆகிவிட்டது என்கிறார்கள்.

இந்த நிலையில் நாளைய கூட்டத்தில் யார் யார் பேசவேண்டும் என்பதுவரை முடிவு செய்துவிட்ட எடப்பாடி பழனிசாமி அதே நேரம் டெல்லியில் இருக்கும் தங்கமணி, வேலுமணியோடும் பேசியிருக்கிறார். எடப்பாடியின் நம்பிக்கைக்கு உரிய இருவரும் நேற்று பியூஷ் கோயல், இன்று அமித் ஷா ஆகியோரை சந்தித்துப் பேசினார்கள். அதிமுகவைப் பொறுத்தவரைக்கும் தற்போது எடப்பாடிக்கே செல்வாக்கு அதிகம் இருக்கிறது என்பதை அமித் ஷாவிடம் எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள். இதையெல்லாம் கேட்டுக் கொண்ட அமித் ஷா, ‘இப்போதைக்கு பிரச்சினை எதுவும் வேணாம் பாத்துக்கங்க’ என்று சொல்லியிருக்கிறார். இதை டெல்லியில் இருந்தபடியே எடப்பாடியிடம் தெரிவித்துவிட்டார்கள் தங்கமணியும், வேலுமணியும்.

ஏற்கனவே ஆலோசனைக் கூட்டத்தில் தனக்கு மெஜாரிட்டி இருப்பதை உணர்ந்திருக்கும் எடப்பாடி இதுபற்றி தனக்கு நெருக்கமான சிலரிடம் ஆலோசித்திருக்கிறார். ‘ஆலோசனைக் கூட்டத்தில் மோதல் வெடித்தால் அது உள்ளாட்சித் தேர்தலில் கட்சியைதான் பாதிக்கும். ஏற்கனவே பெரும்பாலான நிர்வாகிகள் நம் பக்கம் இருக்கும்போது இன்னும் பக்காவாக தயார் ஆகி பொதுக்குழுவில் நேரடியாக நமது ஆதரவை நிரூபிச்சுக்கலாம். இந்தக் கூட்டத்துல பிரச்சினை ஆச்சுன்னா பன்னீர் தரப்பும் வேற மாதிரி மூவ் பண்ணவும் வாய்ப்பிருக்கு. அதனால நாளைய கூட்டத்தை அமைதியா கடந்து போறதுதான் நல்லது’ என்று அவர்கள் எடப்பாடிக்கு ஆலோசனை சொல்லியிருக்கிறார்கள். இதன் பிறகே எடப்பாடி நாளை ஒற்றைத் தலைமை- இரட்டைத் தலைமை பிரச்சினையை கையிலெடுக்க வேண்டாம் என்ற முடிவில் இருக்கிறார். தேர்தல் தோல்வி, உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்ளும் விதம் பற்றி பேசினால் மட்டுமே போதும் என்றும் கருதுகிறார்.

தவிர, டெல்லியில் இருந்து வந்த தகவலை அடுத்து ஓ.பன்னீரிடம் பேசியிருக்கிறார் எடப்பாடி. ‘நாளைக்கு கூட்டத்துல எந்தப் பிரச்சினையும் வந்துவிடக் கூடாது.அப்படி வந்துட்டால் அது ஆட்சிக்குதான் ஆபத்தா போயிடும். ஆட்சி போயிருச்சுன்னா அப்புறம் ஒண்ணும் பண்ண முடியாது. அதனால நாளைக்கு கூட்டத்தை எப்படி அமைதியா நடத்தணும்னு நாம ரெண்டு பேரும் சேர்ந்து உட்காந்து பேசி ஒரு முடிவெடுப்போம் வாங்க’ என்று அழைத்திருக்கிறார். இதற்கு பன்னீரும் ஒப்புக் கொண்டிருக்கிறார். அனேகமாக இன்று இரவு எடப்பாடி பழனிசாமியும், பன்னீர் செல்வமும் உட்கார்ந்து நாளைய கூட்டத்தை பிரச்சினை இல்லாத வகையில் நடத்துவது பற்றி பேசுவார்கள் என்கின்றன அதிமுக தலைமைக் கழக வட்டாரத் தகவல்கள்.

இந்த திடீர் சமரச முடிவு பற்றி கேள்விப்பட்ட சில சீனியர்கள், ‘இவங்களே பேசச் சொல்லி ஆட்களைத் தூண்டிவிடுவாங்க. அப்புறம் இவங்களே தங்கள் முதல்வர், துணை முதல்வர் பதவிகளை காப்பாத்திக்கறதுக்காக உட்கார்ந்து பேசுவாங்க. ஆட்சியை பாக்குறாங்களே தவிர, கட்சி என்னாகுதுனு கொஞ்சம் கூட யோசிக்க மாட்டேங்குறாங்க’ என்று புழுங்கிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் வேண்டுமானால் ஏற்கனவே முடிவு செய்யப்பட்ட நிகழ்ச்சி நிரலை மீறி நாளை பேசக் கூடும்” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்துவிட்டு ஆஃப் லைனுக்கு போனது வாட்ஸ் அப்


மேலும் படிக்க


அதிமுகவில் இணைந்த முன்னாள் அமைச்சர்!


டிஜிட்டல் திண்ணை: எம்.எல்.ஏ.க்கள் பலம்: அதிமுகவில் மோதிக்கொள்ளும் மா.செ.க்கள்!


கலெக்டர் ரோகிணியை எகிறிய எடப்பாடி


மோடிக்கு வானம் கொடுத்த பாகிஸ்தான்


செக்ஸுக்கு பிறகு சக்தியாய் உணரும் இந்தியப் பெண்கள்!


கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - சங்கரா மீனும் கெட்டியான குழம்பும்! ...

3 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - சங்கரா மீனும் கெட்டியான குழம்பும்!

சமூக வலைதளங்களுக்கு மத்திய அரசு புதிய கட்டுப்பாடு!

5 நிமிட வாசிப்பு

சமூக வலைதளங்களுக்கு மத்திய அரசு புதிய கட்டுப்பாடு!

டிஜிபி ராஜேஷ் தாஸ் சஸ்பெண்ட்?

5 நிமிட வாசிப்பு

டிஜிபி ராஜேஷ் தாஸ் சஸ்பெண்ட்?

செவ்வாய் 11 ஜுன் 2019