மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 5 ஏப் 2020

வெயில்: காசிக்குச் சென்ற 4 பேர் பலி!

வெயில்: காசிக்குச் சென்ற 4 பேர் பலி!

காசி, ஆக்ராவுக்குச் சுற்றுலா சென்ற கோவையைச் சேர்ந்த 4 முதியோர், உத்தரப் பிரதேச மாநிலத்தில் கடுமையான வெயிலைத் தாங்க முடியாமல் பலியாகினர்.

நாடு முழுவதும் வெயிலின் தாக்கம் மிக மோசமாக உள்ளது. பல இடங்களில் 50 டிகிரி செல்சியஸுக்கும் மேல் வெப்பம் பதிவாகியுள்ளது. இந்த வெயிலினால் கோயம்புத்தூரில் இருந்து வடமாநிலத்துக்குச் சுற்றுலா சென்ற குழுவொன்று கடுமையான பாதிப்பைச் சந்தித்துள்ளது.

கோவையில் இருந்து காசி, ஆக்ரா உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களுக்குச் சென்றது 68 பேர் கொண்ட ஒரு குழு. ஆக்ராவில் இருந்து கேரளா எக்ஸ்பிரஸ் மூலமாக, இக்குழுவினர் கோவைக்குத் திரும்பத் திட்டமிட்டிருந்தனர். இவர்கள் அனைவரும் நேற்று (ஜூன் 10) சாதாரண படுக்கை வசதி கொண்ட எஸ் 8, எஸ் 9 பெட்டிகளில் பயணத்தைத் தொடங்கினர். உத்தரப் பிரதேச மாநிலத்தில் நிலவும் கடுமையான வெயில் காரணமாக, பயணிகளில் சிலருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. பெரும்பாலானோர் வெயிலினால் ஏற்பட்ட உடல் வறட்சியால் அவதிப்பட்டனர். கடுமையான வெயிலோடு அனல் காற்றும் வீசியதால் நிலைமை இன்னும் மோசமானது.

ஜான்சி எனும் இடமருகே வந்தபோது, வெயில் தாங்க முடியாமல் 4 முதியோர் பலியாகினர். இவர்கள் நால்வருமே 60 வயதுக்கு மேற்பட்டவர்கள். பச்சையா (80), பாலகிருஷ்ணா (67), தனலட்சுமி (74), தெய்வானை (71) ஆகியோர் பலியானதாகத் தெரிய வந்துள்ளது. இவர்களது சடலங்கள் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. பரிசோதனைக்குப் பின்னர், இன்று மாலையில் சடலங்கள் கோவைக்கு அனுப்பி வைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார் வடக்கு மத்திய மண்டல ரயில்வே மேலாளர் நீரஜ் அம்பிஷ்ட்.

ஜான்சியிலுள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் சுப்பரய்யா (71) என்ற முதியவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஆக்ராவில் இருந்து புறப்பட்டதுமே சில முதியோர்கள் தாங்கமுடியாத அளவுக்கு சுவாசக் கோளாறும் உடல் சோர்வும் இருப்பதாகத் தெரிவித்ததாகவும், அவர்கள் சிகிச்சை பெற ஏற்பாடு செய்வதற்குள் மரணித்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளனர் இக்குழுவைச் சேர்ந்தவர்கள்.


மேலும் படிக்க


அதிமுகவில் இணைந்த முன்னாள் அமைச்சர்!


டிஜிட்டல் திண்ணை: எம்.எல்.ஏ.க்கள் பலம்: அதிமுகவில் மோதிக்கொள்ளும் மா.செ.க்கள்!


கலெக்டர் ரோகிணியை எகிறிய எடப்பாடி


மோடிக்கு வானம் கொடுத்த பாகிஸ்தான்


செக்ஸுக்கு பிறகு சக்தியாய் உணரும் இந்தியப் பெண்கள்!


செவ்வாய், 11 ஜுன் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon