மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, செவ்வாய், 2 ஜுன் 2020

ஸ்டெர்லைட் வழக்கு: புதிய அமர்வு நியமனம்!

ஸ்டெர்லைட் வழக்கு: புதிய அமர்வு நியமனம்!

நீதிபதி சசிதரன் கோரிக்கையை ஏற்று, ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான வழக்கை விசாரிக்க வேறு அமர்வை நியமனம் செய்துள்ளது சென்னை உயர் நீதிமன்றப் பதிவுத் துறை.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி, கடந்த ஆண்டு மே மாதம் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி வேதாந்தா குழுமம் சார்பில் தொடரப்பட்ட வழக்கு விசாரணை இன்று (ஜூன் 11) சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெறவதாக இருந்தது. ஆனால், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் நீதிபதி சத்தியநாராயணன் அமர்வில் இது தொடர்பான விசாரணை நிலுவையில் இருப்பதால் இவ்வழக்கு விசாரணையில் இருந்து விலகுவதாகத் தெரிவித்தார் நீதிபதி சசிதரன். இதையடுத்து, இந்த வழக்கை வேறு அமர்வுக்கு மாற்றுமாறு உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி தஹில் ரமானிக்குப் பரிந்துரை செய்தது நீதிபதிகள் சசிதரன், ஆஷா அமர்வு.

உடனடியாக இந்த வழக்கு விசாரணையை வேறு அமர்வுக்கு மாற்ற வேண்டுமென்று, வேதாந்தா குழுமம் சார்பில் தலைமை நீதிபதி தஹில் ரமானியிடம் முறையிடப்பட்டது. இது தொடர்பாக, இன்று பிற்பகலில் நிர்வாக உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று பதிலளித்திருந்தார் தலைமை நீதிபதி.

இந்த நிலையில், ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்கக் கோரித் தொடரப்பட்ட வழக்கை நீதிபதிகள் சிவஞானம், பவானி சுப்பராயன் அமர்வு விசாரிக்கும் என்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது உயர் நீதிமன்றப் பதிவுத் துறை. நீதிபதி சசிதரன் பரிந்துரையை ஏற்று இந்த மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.


மேலும் படிக்க


அதிமுகவில் இணைந்த முன்னாள் அமைச்சர்!


டிஜிட்டல் திண்ணை: எம்.எல்.ஏ.க்கள் பலம்: அதிமுகவில் மோதிக்கொள்ளும் மா.செ.க்கள்!


கலெக்டர் ரோகிணியை எகிறிய எடப்பாடி


மோடிக்கு வானம் கொடுத்த பாகிஸ்தான்


செக்ஸுக்கு பிறகு சக்தியாய் உணரும் இந்தியப் பெண்கள்!


செவ்வாய், 11 ஜுன் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon