மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வெள்ளி, 21 பிப் 2020

ஹைட்ரோகார்பனை எதிர்த்து மனித சங்கிலி: அனுமதி!

ஹைட்ரோகார்பனை எதிர்த்து மனித சங்கிலி: அனுமதி!

காவிரி டெல்டா பகுதிகளில் ஹைட்ரோகார்பன் எடுப்பதை எதிர்த்து மனிதசங்கிலி போராட்டம் நடத்த சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை அனுமதியளித்துள்ளது.

தமிழகத்தின் காவிரி டெல்டா பகுதிகளில் ஹைட்ரோகார்பன் எடுக்கும் திட்டத்தை எதிர்த்து மரக்காணத்திலிருந்து ராமேஸ்வரம் வரை மனிதசங்கிலி போராட்டம் நடத்த அனுமதி கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. ஜூன் 23ஆம் தேதியன்று மனித சங்கிலி போராட்டம் நடத்த ஜூன் 18ஆம் தேதிக்குள் உரிய நிபந்தனையுடன் அனுமதி வழங்கும்படி சட்ட ஒழுங்கு கூடுதல் காவல்துறை தலைவருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த மனுவை தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையை சேர்ந்த லெனின் என்பவர் தாக்கல் செய்திருந்தார்.

அம்மனுவில், பேரழிப்புக்கு எதிரான பேரியக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில், விவசாயிகளுக்கு கற்பித்து இயற்கை விவசாயம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதாகவும், தஞ்சை டெல்டா பகுதியில் மீத்தேன் மற்றும் ஹைட்ரோகார்பன் எடுக்க அரசு திட்டமிட்டு வருவதால் விவசாயம் முற்றிலுமாக அழியும் அபாயம் உள்ளதாகவும், ஜூன் 12ஆம் தேதியன்று மரக்காணம் முதல் ராமேஸ்வரம் வரை மனித சங்கிலி போராட்டம் நடத்தவுள்ளதாகவும், அதுதொடர்பாக அனுமதி கோரியும் காவல்துறை பதிலளிக்கவில்லை எனவும், மனிதசங்கிலி போராட்டம் நடத்த அனுமதி வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார்.

இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, 600 கிலோமீட்டருக்கு மனிதசங்கிலி நடைபெறுவதால் பாதுகாப்பு வழங்குவதில் சிக்கல் ஏற்படும் எனவும், போக்குவரத்து பிரச்சினைகள் ஏற்படும் எனவும் அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார். அதன்பின், மனிதசங்கிலி போராட்டத்தை வேறு ஒரு தேதியில் நடத்தலாமே என்று நீதிபதி மனுதாரரிடம் கேட்டார். அதற்கு, ஜூன் 23ஆம் தேதியன்று மனிதசங்கிலி நடத்த அனுமதிக்கும்படி கோரப்பட்டது. அதைத்தொடர்ந்து, ஜூன் 14ஆம் தேதியன்று மனுதாரர் சட்ட ஒழுங்கு கூடுதல் காவல்துறை தலைவரிடம் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டுமெனவும், ஜூன் 23ஆம் தேதியன்று மனிதசங்கிலி நடத்த ஜூன் 18ஆம் தேதிக்குள் அனுமதியளிக்க வேண்டுமெனவும் நீதிபதி உத்தரவிட்டார்.


மேலும் படிக்க


அதிமுகவில் இணைந்த முன்னாள் அமைச்சர்!


டிஜிட்டல் திண்ணை: எம்.எல்.ஏ.க்கள் பலம்: அதிமுகவில் மோதிக்கொள்ளும் மா.செ.க்கள்!


கலெக்டர் ரோகிணியை எகிறிய எடப்பாடி


மோடிக்கு வானம் கொடுத்த பாகிஸ்தான்


செக்ஸுக்கு பிறகு சக்தியாய் உணரும் இந்தியப் பெண்கள்!


செவ்வாய், 11 ஜுன் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon