மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வெள்ளி, 21 பிப் 2020

மாயமான ஏஎன் 32 விமான பாகங்கள் கண்டுபிடிப்பு!

மாயமான ஏஎன் 32 விமான பாகங்கள் கண்டுபிடிப்பு!

காணாமல்போன ஏஎன் 32 விமானத்தின் பாகங்கள் அருணாசலப் பிரதேசத்திலுள்ள சியாங் மாவட்டத்தில் கிடப்பதை உறுதி செய்துள்ளது இந்திய விமானப் படை.

கடந்த ஜூன் 3ஆம் தேதி மதியம் 12.27 மணியளவில் அசாம் மாநிலம் ஜோர்காத் விமானப்படை தளத்தில் இருந்து, அருணாச்சலப் பிரதேச மாநிலம் மெசுகா நோக்கிப் பயணித்தது இந்திய விமானப்படையைச் சேர்ந்த ஏஎன் 32 ரக விமானம். இதில் 13 பேர் பயணித்தனர். புறப்பட்ட அரை மணி நேரத்தில் ராடார் கண்காணிப்பில் இருந்த அந்த விமானம் காணாமல்போனது. அதனைத் தேடும் பணியில் இந்திய விமானப் படையுடன் இந்திய கடற்படையும் இஸ்ரோவும் ஈடுபட்டு வந்தன.

கடந்த சனிக்கிழமையன்று (ஜூன் 8) காணாமல்போன ஏஎன் 32 ரக விமானம் குறித்து தகவல் தெரிவிப்பவர்களுக்கு 5 லட்சம் ரூபாய் சன்மானம் வழங்கப்படுமென்று அறிவிப்பு வெளியிட்டது இந்திய விமானப் படை.

இந்த நிலையில், இன்று (ஜூன் 11) அருணாச்சலப் பிரதேச மாநிலம் சியாங் மாவட்டத்திலுள்ள பாயும் என்ற இடத்தில் அந்த விமானத்தின் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்திய விமானப் படையைச் சேர்ந்த எம்ஐ 17 ஹெலிகாப்டரில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் முயற்சியின்போது, காணாமல்போன விமானம் சுமார் 12,000 அடி உயரத்தில் கிடந்தது தெரிய வந்துள்ளது.

“அந்த விமானத்தில் பயணித்தவர்களில் யாரேனும் உயிரோடு இருக்கிறார்களா என்பதை அறியும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தகவல் வெளியிட்டுள்ளது இந்திய விமானப் படை. விங் கமாண்டர் ஜி.எம்.சார்லஸ், ஸ்குவாட்ரன் லீடர் ஹெச்.வினோத், ப்ளைட் லெப்டினண்ட் மோகித் கார்ஹ், சுமித் மொஹந்தி, ஆஷிஷ் தன்வர், ராஜேஷ் தாபா ஆகிய 6 அதிகாரிகளும், மற்ற பிரிவுகளைச் சேர்ந்த அனூப், ஷரின், கே.கே.மிஷ்ரா, பங்கஜ் சங்வான், எச்.கே.சிங், ராஜேஷ்குமார், புதாலி ஆகியோரும் அந்த விமானத்தில் பயணித்தனர் என்று தகவல் வெளியாகியுள்ளது.


மேலும் படிக்க


அதிமுகவில் இணைந்த முன்னாள் அமைச்சர்!


டிஜிட்டல் திண்ணை: எம்.எல்.ஏ.க்கள் பலம்: அதிமுகவில் மோதிக்கொள்ளும் மா.செ.க்கள்!


கலெக்டர் ரோகிணியை எகிறிய எடப்பாடி


மோடிக்கு வானம் கொடுத்த பாகிஸ்தான்


செக்ஸுக்கு பிறகு சக்தியாய் உணரும் இந்தியப் பெண்கள்!


செவ்வாய், 11 ஜுன் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon