மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 6 ஜுன் 2020

2 லட்சம் வீடுகள்: கோயலிடம் அமைச்சர்கள் கோரிக்கை!

2 லட்சம் வீடுகள்: கோயலிடம் அமைச்சர்கள் கோரிக்கை!

மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, பியூஷ் கோயல் ஆகியோரை சந்தித்த தமிழக அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி ஆகியோர் சந்தித்து கோரிக்கை மனு அளித்துள்ளனர்.

அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி மற்றும் தங்கமணி ஆகியோர், தமிழக பாஜக பொறுப்பாளரும், மத்திய ரயில்வே துறை அமைச்சருமான பியூஷ் கோயலை டெல்லியில் இன்று (ஜூன் 11) சந்தித்து, தமிழகத்தின் வளர்ச்சிப் பணிகள் தொடர்பாக கோரிக்கை மனு அளித்தனர்.

அமைச்சர் வேலுமணி அளித்துள்ள மனுவில், ”14வது நிதி ஆணையத்தின் கீழ், தமிழக உள்ளாட்சி அமைப்புகளுக்கு 2017-18-ம் நிதியாண்டுக்கான செயல்திறன் நிதியாக 560 கோடியே 15 லட்சம் ரூபாயையும், 2018-19-ம் நிதியாண்டின் 2-வது தவணை அடிப்படை நிதியாக ஆயிரத்து 608 கோடியே 3 லட்சம் ரூபாயையும் விடுவிக்க வேண்டும்.

தமிழகத்தில் கஜா பாதித்த மாவட்டங்களில் பிரதம மந்திரி வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் 2 லட்சம் வீடுகள் கட்ட ஒப்புதல் அளிக்க வேண்டும். அதில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கு 60 சதம், மற்றவர்களுக்கு 40 சதவிகிதம் என்கிற கட்டுப்பாட்டை தளர்த்தி தகுதி வாய்ந்தவர்களுக்கு வீடுகள் வழங்க அனுமதிக்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.

பியூஷ் கோயலுடனான சந்திப்பைத் தொடர்ந்து, உள் துறை அமைச்சர் அமித் ஷாவையும் தங்கமணி, வேலுமணி ஆகியோர் சந்தித்துப் பேசியுள்ளனர். இதுதொடர்பாக தங்கமணியின் டிவிட்டர் பதிவில், “உள்ளாட்சி அமைப்புகளுக்கு மத்திய அரசு வழங்க வேண்டிய நிதி ஒதுக்கீடு குறித்தும் பிரதம மந்திரியின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் விடுபட்ட பயனாளிகளை இணைப்பது குறித்தும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து மனு அளித்தோம்” என்று குறிப்பிட்டுள்ளனர்.


மேலும் படிக்க


அதிமுகவில் இணைந்த முன்னாள் அமைச்சர்!


டிஜிட்டல் திண்ணை: எம்.எல்.ஏ.க்கள் பலம்: அதிமுகவில் மோதிக்கொள்ளும் மா.செ.க்கள்!


கலெக்டர் ரோகிணியை எகிறிய எடப்பாடி


மோடிக்கு வானம் கொடுத்த பாகிஸ்தான்


செக்ஸுக்கு பிறகு சக்தியாய் உணரும் இந்தியப் பெண்கள்!


செவ்வாய், 11 ஜுன் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon